வெண்கடுகை வைத்து ஒரே ஒரு முறை இந்தப் பரிகாரத்தை செய்தால் போதும் !! வாழ்நாள் முழுவதும் எதிரி, கெட்ட சக்தி தொல்லை, எதுவும் நம்மளை நெருங்காது !!

வாழ்நாள் முழுவதும் நம் வீட்டையும், நம்மையும், கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றலிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள, இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்தாலே போதும். வெண் கடுகை வைத்து செய்யக்கூடிய இந்த பரிகாரத்தை முறையாக எப்படி செய்வது, எந்த கிழமையில் செய்வது, எந்த மந்திரத்தை உச்சரித்து செய்வது என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எந்த கண் திருஷ்டியும், யாருடைய பெரு மூச்சும், கண்ணுக்கு தெரியாத எதிரிகளின் கெட்ட செயல் பாடுகளும், நம்மை வந்து தாக்காது. முதலில், நாட்டு மருந்து கடைகளில் விற்கும் வெண்கடுகை வாங்கி ஒரு அகலமான தட்டில் கொட்டி கொள்ள வேண்டும்.

உங்களது கைகளை அந்த வெண்கடுகை தொட்ட வண்ணம், துர்க்கை அம்மனை வேண்டிக் கொண்டு, எந்த விதமான கெட்ட சக்திகளும், கண் திருஷ்டியும், என்னையும், என் குடும்பத்தையும் தாக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டே ‘ஓம் தும் துர்காயை நமஹ’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து விடுங்கள். இப்போது அந்த வெண்கடுகு முழுவதும் துர்க்கை அம்மனின் அருள் ஆற்றல் நிறைந்திருக்கும். பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு துர்க்கை அம்மனை மனதார வேண்டிக்கொண்டு அதன்பின்பு மந்திரத்தை உச்சரிக்கவும். அடுத்தபடியாக உங்கள் வீட்டில் நான்கு மூலைகளிலும் இந்த வெண்கடுகை தூவி விட வேண்டும். முடிந்தால், உங்கள் வீட்டை சுற்றி இடம் இருந்தால், வீட்டின் வெளி பக்கத்தில் இருக்கக்கூடிய நான்கு திசைகளிலும், இந்த வெண்கடுகை தூவி விட்டு விடலாம். (அதாவது கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்ற நான்கு திசைகளுக்கும், நான்கு மூலைகள் இருக்கும் அல்லவா அந்த இடத்தில் தூங்கி விட்டு விடுங்கள்.)

முடியாதவர்கள், வீட்டின் வெளி பக்கம் இடம் இல்லாதவர்கள், வீட்டின் உள் பக்கத்திலேயே நான்கு திசைகளிலும் இந்த வெண்கடுகை தூவி விட்டுவிடலாம். ஞாயிற்றுக்கிழமை மாலை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு 7 மணிக்கு மேல், இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பானதாக இருக்கும். வீட்டின் வெளியே வெண்கடுகை தூவி விட்டு விட்டால், அதை மீண்டும் கூட்டி சுத்தம் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அப்படியே விட்டு விடுங்கள். வீட்டின் உள் பக்கத்தில் வெண்கடுகை தூங்கிவிட்டால், அன்று இரவு மட்டும் அந்த வெண்கடுகு அப்படியே இருக்கட்டும். மறுநாள் எப்போதும் போல வீட்டை சுத்தம் செய்யும்போது, வென்கடுகுகளை கூட்டி வாரி எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். மந்திரத்தை உச்சரித்து துர்க்கை அம்மனின் சக்தி நிறைந்திருக்கும் வெண்கடுகை, ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் போட்டு, உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு பகுதியில் கண்ணுக்கு தெரியாத இடத்தில் வைத்து விடுங்கள்.

அலமாரியின் மேல் பகுதியாக இருந்தாலும் கூட பரவாயில்லை. யாருக்கும் தெரிய வேண்டாம். திறந்தபடி அப்படியே வைத்து விட்டால், உங்கள் வீட்டிற்குள் எதிர்மறை எண்ணத்தோடு வருபவர்களின் கெட்ட எண்ணங்கள் உங்களை தாக்காமல் இருக்க இது பாதுகாப்பாக இருக்கும். இந்த பரிகாரத்தை ஒரு முறை செய்து விட்டாலே போதும். தேவை என்றால் வருடத்திற்கு ஒரு முறை, செய்வதில் தவறொன்றும் கிடையாது. ஆனால் ஒருமுறை செய்யும்போதே உங்கள் வீட்டில் உள்ளவர்கள், வித்தியாசத்தை கட்டாயம் உணர முடியும். கெட்ட சக்தியை விரட்ட கூடிய ஆற்றல் மிகுந்த இந்த வெண்கடுக்கு, துர்க்கை அம்மனின் மந்திரத்தை உச்சரிக்கும்போது, மேலும் அதிக ஆற்றல் கிடைத்து, அதிக பலனை நமக்கு கொடுக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.