வெறும் பாயை போட்டு வைத்தால் என்ன ஆபத்து வரும் என்று தெரியுமா ?? நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் !!

என்னடா இது புது கதையா இருக்கு? என்றெல்லாம் யோசிக்க தேவையில்லை. புது கதை எல்லாம் ஒன்றும் இல்லை. நம் முன்னோர்கள் சொன்ன பாட்டி காலத்து கதை தான் இது. வெறும் பாயை போட்டு வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உங்கள் வீட்டில் பெரியவர்கள், வயதில் மூத்தவர்கள் இருந்தால் கேட்டுப் பாருங்கள். அவர்கள் அதைப் பற்றிய கதைகளை எக்கச்சக்ககமாக கூறுவார்கள். பொதுவாகவே குழந்தைகள் விளையாட பாய் போட்டு கொடுப்பது நல்ல விஷயம் தான். வெறும் தரைகளில் விளையாட விடுவதை விட இது போல் பாய் போட்டு விளையாட கொடுப்பது நல்லது. வெறும் தரை சுத்தமாக இருப்பதில்லை. அதில் எறும்புகள், பூச்சிகள் இருந்தால் குழந்தைகளை கடித்து விடும். இதனால் சாயங்கால வேளைகளில் நீங்கள் வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ விளையாட வேண்டும் என்றால் பாய் போட்டு அமர்ந்து விளையாடுவது நல்லது.

குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விளையாடுவதற்கு அல்லது அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பதற்க்கோ பாய் போட்டு பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் எந்த தவறும் இல்லை. அந்த காலத்தில் எல்லாம் இது போல் தான் பாய் அல்லது கயிற்று கட்டில்களில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். 12 மணிக்கு உச்சி வேளையில் எங்கும் விளையாட அனுமதிக்க மாட்டார்கள். பகல் 12 மணிக்கும், இரவு 12 மணிக்கும் காத்து கருப்பு போன்றவை உலாவிக் கொண்டிருக்கும் நேரமாக கருதப்பட்டு வருவதால் அந்த நேரங்களில் எல்லாம் இது போன்ற சில தவறுகளை செய்யாமல் இருப்பது நல்லது. பகல் 12 மணிக்கு உச்சி வேளையில் குழந்தைகளை தனியாக வெயிலில் அனுப்புவது அவ்வளவு நல்லதல்ல என்பார்கள். காத்து கருப்பு என்பது நீங்கள் மூடநம்பிக்கையாக கருதினாலும் அறிவியல் ரீதியாகவும் உச்சிவேளை என்பது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.

நம் முன்னோர்கள் எதைச் சொல்லி வைத்தாலும் அதில் நிச்சயம் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். அதை முற்றிலும் புறக்கணிப்பது தவறான செயலாகும். நம்முடைய நன்மைக்காக ஒளித்து வைத்து கூறப்பட்ட பழமொழிகள் இப்போது புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நம் வீட்டிற்கு உள்ளேயே வெறும் பாயைப் போட்டு சிறிது நேரம் விளையாடிக் கொண்டிருப்போம். அல்லது டிவி போன்ற பொழுதுபோக்குகளை ரசித்துக் கொண்டிருப்போம். படுக்கச் செல்லும் பொழுது அந்த பாயை அப்படியே விட்டு விட்டு படுக்கை அறைக்கு சென்று படுத்து விடுவோம். இவ்வாறு செய்வது தவறு என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். பகல் 12 மணி வேளையிலும், இரவு 12 மணி வேளையிலும் வெறும் பாய் தனியாக கிடத்தி வைப்பது துர் சக்திகளை நாமே வரவேற்பது போன்ற செயலாக கூறுகிறார்கள். எப்படி சில பொருட்களில் நல்ல சக்திகள் குடிகொள்ளும் என்பது நம்புகிறீர்களோ!

அதே போல தான் சில பொருட்களுக்கு துர் சக்திகளை ஈர்க்கும் தன்மை உண்டு. அந்த வகையில் வெறும் பாய் போட்டு வைப்பது துர் சக்திகளை ஈர்த்துவிடும் என்ற கூற்று நிலவுகிறது. இதனால் நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன் அந்த பாயை அப்படியே விட்டு விட்டுப் போகாமல் சுருட்டி மடித்து எந்த இடத்தில் வைக்க வேண்டுமோ, அந்த இடத்தில் வைத்து விட்டு அதன் பிறகு சென்று உறங்குவது நன்மை தரும். அந்த காலத்திலெல்லாம் பாயில் தான் நாம் படுப்போம் அல்லவா? அதனால் தான் மாதவிடாய் போன்ற தீட்டு காலங்களில் பாயை அலசி காய வைத்து விடுவோம். அதற்கும் இது போன்ற காரணங்கள் உண்டு. நம் வீட்டில் சுபிட்சம் நிலைத்திருக்க இது போன்ற தரித்திர செயல்களை நாம் தவிர்ப்பது நமக்கும் நம் குடும்பத்திற்கும் நல்லது என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.