வெற்றியையும் செல்வதையும் அடைய இதை விட சிறந்த நேரம் எதுவும் இல்லை என்கிறது சாஸ்திரம் !! அது அப்படி எந்த நேரம் தெரியுமா !!

நாம் அனைவரும் அறிந்தது நட்சத்திரங்களில் மொத்தம் 27 வகை என்பது தான். ஆனால் தொன்மை காலத்தில் முதல் நட்சத்திரமாக இருந்தது அபிஜித் என்கிற நட்சத்திரம் தான். இது பலரும் அறியாத ரகசிய உண்மை. 28 நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமாக அபிஜித் நட்சத்திரம் இருந்திருக்கிறது. இந்த அபிஜித் நட்சத்திரம் பிரம்ம முகூர்த்ததிற்கு இணையான சக்தியைப் பெற்றிருக்கிறது. பிரம்ம முகூர்த்தத்தில் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் முழு வெற்றி கிடைக்கும். அதே போல் தான் அபிஜித் நட்சத்திரத்தில் எந்த காரியத்தை செய்தாலும் பரிபூரண வெற்றி கிடைக்கும். ஜூலியன் காலண்டர்களில் அபிஜித் நட்சத்திரம் முகூர்த்த குறியீடுகள் மூலம் குறியிடப் பட்டிருப்பது இதனை உறுதி செய்வதாக இருந்து வருகிறது.அக்கால ரிஷிகளும், முனிகளும் இந்த நட்சத்திரத்தில் காரியங்களை தொடங்கி தங்களது வெற்றியை கண்டுள்ளனர். இந்த காலத்தில் கடவுளரை வழிபடுவதும், சுபநிகழ்ச்சிகள் செய்வதும் யோகமாக குறிப்பிடப்படுகிறது.

நட்சத்திரத்தை வைத்தே முகூர்த்தங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஒவ்வொரு முகூர்த்த நேரத்திற்கும் தோஷங்கள் நீக்கப்படுகின்றன. அவ்வகையில் அபிஜித் நட்சத்திரமும் தோஷம் இல்லாத நேரத்தை கொண்டிருக்கிறது. முகூர்த்த நேரம், நல்ல நேரம், பிரம்ம முகூர்த்தம் வரிசையில் அபிஜித் நேரமும் தோஷம் இல்லாமல் இருப்பதால் இந்த நேரத்தில் செய்யும் சுபகாரியங்கள் வெற்றி பெறும் என்பது ஐதீகம். – ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு குறியீடு இருக்கும். இந்த அபிஜித் நட்சத்திரத்திற்கும் ஒரு குறியீடு உள்ளது. நான்கு பாதைகளை ஒன்றிணைக்கும் நாற்சந்தியை வடிவமாக பெற்றிருக்கிறது. இது நான்கு வேதங்களையும் குறிக்கிறது. வேததர்ம நெறியில் வாழ்ந்தால் வெற்றி கிட்டும் என்று பொருள் உள்ளது. வியாபாரம் செழிக்க, இழந்த பொருட்களை மீட்க, அனைத்திலும் வெற்றி பெற இந்த அபிஜித் நேரத்தை சிறப்பாக பயன்படுத்தலாம்.அபிஜித் நேரம் கூட்டத்தோடு கூட்டமாக இருந்த போது அதற்கு அவ்வளவு சக்தி இல்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் அது தனித்து பிரிந்து போன போது போது மிகுந்த சக்திகளைப் பெற்றதாம். இதனை அறிந்த ரிஷிகளும், முனிகளும் தங்களது சக்தியை பெருக்கிக்கொள்ள அபிஜித் நேரத்தை பயன்படுத்தி வெற்றி கண்டார்கள். அபிஜித் நேரம் தினமும் வருவது தான். சூரிய உதயத்திற்கு முன்பு வரும் பிரம்ம முகூர்த்தத்தை போல, சூரிய உதயம் ஆன பின்பு சரியாக ஆறு மணி நேரம் கழித்து வருவது தான் அபிஜித் நேரம். இதனை உச்சிவேளை என்று நாம் வழக்கத்தில் கூறி வருகிறோம். 12 மணிக்கு உச்சி வேலை ஆரம்பம் ஆகிறது அல்லவா? எனவே 12 மணி முதல் 1 மணி வரை உள்ள காலமே அபிஜித் நேரம் என்றாகிறது. சுப நிகழ்ச்சிகளில் முகூர்த்த நேரத்தை தவற விட்டவர்கள் அபிஜித் நேரத்தை பயன்படுத்துவார்கள். ‘ஜித்’ என்றால் வெற்றி பெறுதல் என்று அர்த்தம். ‘அபிஜித்’ என்றால் சிறப்பான வெற்றி பெறுதல் என்பது அர்த்தமாகும்.

அபிஜித் நேரத்தில் அர்த்தநாரீஸ்வரரின் அம்சத்தில் விளங்கும் திருநங்கைகளுக்கு வயிறார ஒரு வேளை உணவு அளித்து அவர்களிடமிருந்து பத்து ரூபாய் பெற்றாலும் செல்வ வளம் பெருகும் என்று கூறப்படுகிறது. முக்கிய நட்சத்திரக் கூட்டங்களில் இருந்து அபிஜித் நட்சத்திரம் பிரிந்து காணப்பட்டாலும் அதற்குரிய சக்திகள் தினமும் பெருகி கொண்டே இருக்கிறது என்று வானியல் சாஸ்திரிகள் கூறியுள்ளனர். திருவோண நட்சத்திரத்தன்று அதிகாலையில் கேள்விக்குறி போன்ற தோற்றத்துடன் காணப்படும் நட்சத்திரமே அபிஜித் நட்சத்திரமாகும். இதனை சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும் என்று கூறுகின்றனர். இந்த நட்சத்திரத்தை பார்த்துவிட்டால் அனைத்து காரியங்களும் வெற்றி தான். நம்மை படைத்த இறைவனுக்கே சில புராணங்களில் அபிஜித் நேரத்தில் வெற்றி தந்ததாக வரலாறுகள் உள்ளன. ரிஷிகளும், முனிகளும் மட்டுமன்றி, தேவர்களும், தெய்வங்களும் கூட இந்த நேரத்தை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். அவர்களால் படைக்கப்பட்ட மனிதர்களும் அபிஜித் நேரத்தை சரியாக பயன்படுத்தி அனைத்திலும் வெற்றி காணலாம்.