வேலையே இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடனடியாக நல்ல வேலை கிடைக்க இதோ சக்திவாய்ந்த வழிபாடு !!

கடந்த, சில நாட்களாக வேலை இல்லாதவர்களுக்கு மட்டும்தானா இந்த வழிபாட்டு? நீண்ட நாட்களாக, வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு இந்த வழிபாடு இல்லையா? என்ற கேள்வி, இந்த தலைப்பை படித்தவர்கள் மனதில் கட்டாயம் எழுந்திருக்கும். வெகுநாட்களாக வேலை இல்லாமல், நல்ல வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டத்தை விட, கடந்த சில நாட்களாக எதிர்பாராமல் ஏற்பட்ட லாக் டவுட் மூலம், வேலை இல்லாமல், வருமானம் இல்லாமல், தவித்துக் கொண்டிருப்பவர்களின் சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த சூழ்நிலையை நாம் சரிசெய்ய வேண்டுமென்றால், வீட்டில் இருந்தபடியே எந்தெந்த தெய்வங்களை எப்படி வழிபாடு செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வேலை இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உடனடியாக நல்ல தீர்வு கிடைக்க, ஆன்மீகத்தில் நிறைய வழிபாடுகள் உள்ளது.

அதில் எந்த வழிபாடு, உங்கள் மனதிற்கு பிடித்திருக்கிறதோ, உங்களுடைய இஷ்ட தெய்வம் எதுவோ, உங்களால் எந்த வழிபாட்டை உங்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய முடியுமோ, அதை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். நீண்ட நாட்களாக வேலை இல்லாதவர்களும் தாராளமாக இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.முதலில் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால், ஹனுமனின் பாதங்களைச் சரணடைவது தான் முதல் வழி. துணிச்சலுடன், எதிலும் தோல்வியையே கண்டிராத, அனுமானை தொடர்ந்து 48 நாட்கள் வழிபட்டு வந்தால் நிச்சயம் உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அடுத்ததாக சனிபகவானுடைய வழிபாட்டை, சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் இருந்தபடியே, எள் கலந்த சாதத்தை, நைவேத்யமாக செய்து, சனிபகவானுக்கும் படைத்து வேலை கிடைக்கும் வரை, சனி பகவானது வழிபாட்டைத் தொடர்ந்து செய்து கொண்டே வர வேண்டும். அடுத்ததாக பைரவர் வழிபாடு. கால பைரவருக்கு, செவ்வரளி பூ சாத்தி, உளுந்து வடை செய்து, காரசாரமான புளி சாதத்தை, நைவேத்யமாக படைத்து, வீட்டிலிருந்தபடியே, தேய்பிரை அஷ்டமி தினத்தில், மனதார பைரவரை வழிபட வேண்டும். வாரம் தோறும் வரும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், ராகு கால சமயத்தில், 5 வாரங்கள் இந்த வழிபாட்டை, பைரவருக்கு தொடர்ந்து செய்து வந்தாலும், நிச்சயம் கை மேல் பலன் உண்டு.

காலம் தாழ்த்தாமல் அருள்புரிபவர் காலபைரவர். அரச மரத்துக்கு கீழே இருக்கும் விநாயகருக்கு, உங்கள் கைகளாலேயே தண்ணீர் எடுத்து 11 குடங்கள் அபிஷேகம் செய்து, அந்தப் பிள்ளையாரை 11 முறை வலம் வந்து, 11 தோப்புக் கரணம் போட்டு வழிபடுவதால் கட்டாயம் நல்ல வேலை நிச்சயம் கிடைக்கும். தினம் தோறும் காலை எழுந்தவுடன் சூரியனைப் பார்த்து, சூரிய நமஸ்காரம் செய்து வருபவர்களுக்கு வேலையில் பிரச்சனையும் ஏற்படாது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலையும் கிடைக்கும். வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கும் விஷ்ணுவிற்கும் நெய்தீபம் ஏற்றி வைத்து, வழிபாடு செய்தால் எப்படிப்பட்ட தீராத கஷ்டமும் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பின் வரக்கூடிய மந்திரத்தை 11 முறை உச்சரித்து, மனதார வேண்டுதலை வைத்தால் கட்டாயம் உங்களுக்கு கூடிய விரைவில் நல்ல வேலை கிடைத்துவிடும். ஸ்ரீதேவி அம்ருதோத் பூதா-கமலா சந்திர சோபனா விஷ்ணு-பத்னீ வைஷ்ண வீச வராரோஹா ச சார்ங்கிணீ ஹரி-ப்ரியா தேவ-தேவி மஹாலக்ஷ்மி ச சுந்தரி இந்த வழிபாட்டை எல்லாம் தொடங்குவதற்கு முன்பு, தினம்தோறும் உங்களது குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட வேண்டியது மிக மிக அவசியம் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் இதில் எந்த பரிகாரத்தை தேர்ந்தெடுத்தாலும், உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வரை நம்பிக்கையோடு அந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவை நிறைவு செய்து கொள்ளலாம்.