ஷிவானியால் மனைவியை பிரிந்தாரா பகல் நிலவு சீரியல் நடிகர் ஆசிம்…? ரசிகர்கள் அதிர்ச்சி…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வம் தந்த வீடு பகல்நிலவு கடைக்குட்டி சிங்கம் என்று பல்வேறு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் சின்னத்திரை நடிகர் ஆசிம் சில வருடங்களுக்கு முன்னர் இவருக்கு சோயா என்ற பெண்னுடன் திருமணம் நடந்தேறியது தற்போது அவர் மனைவியை விவாகரத்து செய்து உள்ளதாக அறிவித்திருக்கிறார் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.

அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் நாங்க சட்டப்படி பிரிந்துவிட்டோம் இருவரும் ஒருவருக்கொருவர் பேசி முடிவெடுத்து தான் இந்த விவாகரத்து கிடைத்துள்ளது ஆனால் இது குறித்து மேற்கொண்டு எதுவும் நான் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார் கடந்த ஆண்டுதான் இவருக்கும் பகல் நிலவு தொடரில் நடித்த நடிகைக்கும் தொடர்பு இருப்பதாக ஆசிமுடன் நடித்த சிலர் பிரபல பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்தனர்.

இது குறித்து அந்த பத்திரிக்கை வெளியிட்ட செய்தியாவது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசிமிற்க்கு சோயா என்பவருடன் திருமணம் நடைபெற்றது 3 வருடங்கள் நல்லபடியாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களிடையே தற்போது பிரச்சினை ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றிருக்கிறது மேலும் ஆசிம் குறித்து டெக்னீசியன் ஒருவர் பேசியதாவது அந்த பொண்ணு மிகவும் பாவம் சார் எங்களை பொறுத்தவரை இவர் மேல தான் தப்பு அவருடைய குணமே இப்படித்தான் ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார்.

தற்பொழுது நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது அதில் அவருக்கு ஜோடியாக ஒரு பெண் அறிமுகமானார் அது பள்ளிக்கூடம் செல்லும் பெண் ஆனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது இதனால்தான் ஆசிம் வீட்டில் பிரச்சனை தொடங்கி இருக்கிறது ஒரு கட்டத்தில் இந்த பிரச்சினை சூட்டிங் ஸ்பாட் வரை வந்துவிட்டது அதன் பின்னர் தான் எங்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது என அந்த டெக்னீசியன் குறிப்பிட்டிருக்கிறார்.