ஸ்ரீ ராம ஜெயத்தை முறையாக எப்படி எழுதுவது ??அப்படி எழுதியதை என்ன செய்வது ?? என்ன செய்தால் வேண்டியது நிறைவேறும் !!

ஸ்ரீ ராம ஜெயம் என்னும் ஜென்ம ரக்க்ஷா மந்திரத்தை சிந்தித்தால் எப்பேர்பட்ட முடிக்க முடியாத கஷ்டங்களையும் தீர்த்து வைப்பாராம் அனுமான். ராம நாமாவை சிந்தித்தால் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் செய்த பலன் உண்டாகும் என்று ஈஸ்வரன் கூறுகிறார். செல்வம் பெருக, கடன் தீர, உத்யோக முன்னேற்றம், தொழில் முன்னேற்றம், வியாபார முன்னேற்றம், பணபிரச்சனை நீங்க, திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம், நோய் விலக, ஆரோக்யம், மனநிம்மதி, குடும்ப ஒற்றுமை, கண் த்ருஷ்டி நீங்க, தம்பதி அன்யோன்யம், சனி தோஷம் நீங்க, தசா புத்தி தோஷம் நீங்க, நவக்ரஹ தோஷம் விலக, வழக்கில் வெற்றி பெற, எதிரி தொல்லைகள் நீங்க, செய்வினை விலக, கல்வியில் தேர்ச்சி பெற, ஞாபக சக்தி, மனபயம் நீங்க, திக்கு வாய் நீங்க, சிறந்த பேச்சு திறமை, லக்ஷ்மி கடாக்ஷம், ஐஸ்வர்யம், வீடு, வாகனம், ஆபரணம் சேர, தீர்க்க சுமங்கலி தன்மை.

எதிலும் வெற்றி அடைய, அரசு வேலை, அரசியலில் வெற்றி, வாக்கு பலிதம், கணவன் மனைவி சேர, மனோ தைரியம் பெருக, இவை அனைத்தும் ஹனுமனை துதித்து ஸ்ரீ ராம ஜெயம் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள் குறிப்பு: ஒரு குடும்பம் 1008 முறையாவது ஸ்ரீ ராம ஜெயம் எழுத வேண்டும். எந்த மொழியிலும் எழுதலாம். ஒரு நாளைக்கு 108 முறை மட்டுமே ஸ்ரீ ராம ஜெயம் என்று சொல்லி கொண்டே எழுத வேண்டும். இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் எடுத்து சொல்லி ஸ்ரீ ராம ஜெயம் எழுத சொல்லி, அவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வழி காட்டுங்கள். அவர்களும் இதை எழுதும் போதும், திருப்பணி கைங்கர்யம் செய்யும் போதும் அந்த புண்ணியம் உங்களுக்கும் வந்து சேரும். ஸ்ரீ ராம ஜெயம் எழுதிய பிறகு அதை இறைவனிடம் சேர்ப்பிக்க எளிய வழி: இன்று பலரும் ஸ்ரீ ராம ஜெயம் எழுதினாலும் அதை கோவிலில் போய் சேர்ப்பதில்லை. இதை கருத்தில் கொண்டு “வாலாஜா பேட்டையில் உள்ள ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் ஆலயம்” ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அதன் படி நீங்கள் ஸ்ரீ ராம ஜெயம் எழுதி இந்த ஆலயத்திற்கு அனுப்பினால் அவர்கள் அதை இறைவனிடம் சேர்ப்பார்கள். கோவிலுக்கு அனுப்ப விரும்புவோர் பின்பற்ற வேண்டிய முறை: ஒரு வெள்ளை காகிதத்தில் உங்கள் கோத்ரம், நக்ஷத்திரம், ராசி, பெயர் மற்றும் பிரார்த்தனையை எழுத வேண்டும். பிறகு A4 ஷீட்டில் ( 10 நம்பர் ) வாங்கி, அதன் நான்கு மூலையிலும் மஞ்சள் தடவ வேண்டும். செல்வ வளம் பெருக பச்சை நிறத்திலும், எதிரி பாதிப்பு, கண் த்ருஷ்டி விலக, செய்வினை நீங்க, சிகப்பு நிறத்திலும், சனி தோஷம், தசா புத்தி, நவக்கிரஹ தோஷம் நீங்க கருப்பு நிறத்திலும், நோய் விலக, ஆரோக்யம் மற்றும் பொது பிரார்த்தனை நிறேவேற நீல நிறத்திலும் ஸ்ரீ ராம ஜெயம் எழுத, சிறந்த பலன் உண்டாகும் என்பது ஐதீகம். மேலும் விவரங்களுக்கு வாட்ஸ் அப் +916379101306 எழுதியதை கொரியர் & போஸ்ட் முலம் அனுப்ப வேண்டிய முகவரி: ஸ்ரீ குபேர வீர ஆஞ்சநேயர் ஆலயம் நவக்கிரஹ கோட்டை No 15 / 5 காமாக்ஷி புரம் BDO ஆபிஸ் பின்புறம், வாலாஜா பேட்டை – 632513, ராணி பேட்டை மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா