ஹர்பஜன் சிங் இப்ப ஆலே வேற மாரி ” இந்த IPL-ல நீங்களே பாப்பிங்க !! இந்த IPL தொடரில் அவர் கலக்க போவது உறுதி-தினேஷ் கார்த்திக்..

சென்னை சூப்பர் கிங்ஸ் இல் இருந்து வெளியேற்றப்பட்ட ஹர்பஜன் சிங்கை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது இதைப் பற்றி பேசிய தினேஷ் கார்த்திக் ஹர்பஜன் சிங் ஒரு இளைஞன் இல்லைதான் ஆனாலும் 40 வயது ஹர்பஜன் பயிற்சி செய்வதை பார்க்கும்போது வேறொரு நபராக தெரிகிறார் என கூறியுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக 2020 ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய ஹர்பஜன்சிங் தற்போது 2021 ஐபிஎல் சீசனில் விளையாட உள்ளார் IPL வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார் இவர் IPL-ல் மட்டும் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் இது பற்றிக் கூறிய தினேஷ் கார்த்திக்.

இந்த வருடம் ஐபிஎல்லில் ஹர்பஜன் சிங்கை வேறு ஒரு மனிதராக அனைவரும் பார்க்க போகிறார்கள் என்று பாராட்டி கூறி உள்ளார் மேலும் அவர் கூறியது அவர் பேட்டிங்கிலும் தற்போது நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் சுனில் நரைன் வருன் சக்ரவர்த்தி ஷகிப் அல் ஹசன் இருந்தாலும் தற்போது ஹர்பஜன் சிங்கிற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.