2017-ல் ஜல்லிகட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புகை படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய பாலாஜி….

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக நடந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது இந்த சீசனில் ரியோ ராஜ் ஆரி, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, அர்ச்சனா, ஷிவானி நாராயணன், சனம் செட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி, வேல்முருகன், அனிதா சம்பத், ஆஜித், சுச்சித்ரா, ரேகா, சோம் சேகர், கேப்ரில்லா,என்று 18 பேர் இந்த சீசனில் கலந்துகொண்டனர் இந்த சீசன் முதலிடத்தை ஆரியம் இரண்டாவது இடத்தை பாலாஜியும் பிடித்தனர்

முதல் இடத்தைப் பிடித்த ஆரிக்கு 50 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது பிக்பாஸ் வீட்டில் இந்த சீசனில் கலந்துகொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு ஆக்ரோஷமான சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்தார் சில நேரங்களில் தனது கட்டுப்பாட்டை மீறி பாலாஜி அடிக்கடி ஆரியிடம் மரியாதை குறைவாக பேசியதும் மைக்கை போட்டு உடைத்ததும் சர்ச்சைகளில் முக்கியமான ஒன்றாகும்.

நடிகர் ஆரி சினிமா தவிர்த்து பல்வேறு நற்செயல்களில் தன்னை ஈடுபடத்தி கொண்டுள்ளார் உதாரனமாக ஜல்லிக்கட்டு போராட்டம்,சென்னை வெள்ளம்,விவசாயிகள் பிரச்சனைக்கும் குரல் கொடுத்தவர்தான் நடிகர் ஆரி. விவசாயம் குறித்து பல விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு சென்ற ஆரி கல்லூரி மாணவர்களை ஒன்றினைத்து ஒரே சமயத்தில் அதிக நாற்றுகளை நடவு செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.இதோடு நில்லாமல் மாறுவோம் மாற்றுவோம் என்ற அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் உதவிகளை செய்து வருகிறார்.

இதே போல் பாலாஜி முருகதாஸும் தானும் சும்மா இல்ல நானும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள அவர் அதில் We want ஜல்லிக்கட்டு Save Farmers மற்றும் Ban peta என்ற வாசகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.