கேப்டனாக தவறு செய்த கோலி !! மும்பைக்கு வீசப்பட்ட எக்ஸ்ட்ரா பந்து !!

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபிஎல் போட்டி நேற்று இனிதே சென்னையில் தொடங்கியது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது டாசில் வென்ற விராட்கோலி முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தார்.

முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் சூரியகுமார் யாதவ் மற்றும் கிறிஸ் லின் ஆகிய இருவரின் ஆட்டத்தால் பத்து ஓரங்களில் 86 ரன்களை குவித்தது அதன் பிறகு ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இமாலய ரன்களை குவிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இறுதியில் அர்ஷல் பட்டேல் அருமையாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இதன் மூலம் மும்பை அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.

இதில் 19-வது ஓவரை வீசிய ஜே மிஷன் நன்றாக பந்து வீசினாலும் கேப்டன் கோலி செய்த தவறால் நோபல் கொடுக்கப்பட்டது சர்க்ள் வெளியே 4 பில்டர்களை வைக்காமல் மூவர் மட்டுமே நின்றிருந்தால் அந்த பந்து நோபால் கொடுக்கப்பட்டது இதனால் ஜேமிசன் எக்ஸ்ட்ரா ஒரு பந்தை வீசும் நிலைமை வந்தது அந்த பந்தில் அவர் வீசிய பந்து குணால் பாண்டியாவின் பேட்டை உடைத்தது குறிப்பிடத்தக்கது.