என்கிட்ட 1500 ரூபாய்கு மேல புடவையே இல்லை !! நியா நானாவில் கோபிநாத்தை ஷாக்காக்கிய நடிகை !!

ரசிகர்களிடம் தற்போதுவரை விஜய் டிவியின் நீயா நானா என்பது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமில்லாமல் மக்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியாகவே பார்கப்பட்டு வருகிறது இதில் இந்த வாரம் புடவைகள் மீது ஆர்வம் கொண்ட பெண்கள் மற்றும் பெரிதாக விருப்பம் இல்லாத பெண்கள் என இரு பிரிவினர் இடையே விவாதம் நடந்தது இதில் சிறப்பு விருந்தினராக நடிகை ரித்திகா பங்கேற்றுள்ளார்.

தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறிய அவர் தன்னால் மறக்க முடியாத புடவையை என்றால் எது என்ற கேள்விக்கு தான் முதன்முதலில் சம்பாதித்த சம்பளத்தை வைத்து எடுத்த புடவை அது மிகவும் எனக்கு ஸ்பெஷல் என்றும் அது காஸ்ட்லியாக இருக்க வேண்டிய அவசியமில்லை தனக்கு பிடித்து எனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒரு புடவை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாய்க்கு கிடைத்தாலும் அதை நான் எடுத்துக் கொள்வேன் என கூறி ஆச்சரியப்பட வைத்தார்.

அதனோடு புடவை எடுப்பதை ஸ்டேட்டஸ் உடன் ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் என்னிடம் அதிகபட்சமாக 1500 ரூபாய்க்கு மேல புடவையே இல்லை என்றும் கூறுகிறார் அதேசமயம் 150 ரூபாய் காட்டன் புடவைகள் தன்னிடம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார் அந்த வீடியோ கீழே உள்ளது.