36 வயதில் கர்ப்பமான பிரபல தமிழ் பாடகி…! ஆறு வருடம் காத்திருந்து நிறைவேறிய கனவு …?

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல் 36 வயதாகும் ஸ்ரேயா கோஷல் தற்போது கருவுற்றிருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் தமிழில் முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரின் பேவரட் பாடகர் என்றால் அது ஸ்ரேயா கோஷல் தான்.

அனைவரும் தனது படத்தில் ஒரு பாடலாவது இவரை பாட வைத்து விடவேண்டும் என்று காத்திருக்கும் அளவிற்கு இவரது குரலில் ரசிகர்களிடம் சென்றடைந்து இருக்கிறது ஸ்ரேயா கோஷல் பார்ப்பதற்கும் நடிகை போன்று அழகாக இருப்பதால் பலர் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்தும் இசை உலகத்தில் மட்டுமே என் பயணம் தொடரும் என்று இதுவரை ஆல்பம் பாடல்களுக்கு மட்டும் நடித்துள்ளார் ஸ்ரேயா கோஷல்.

வயது 36 ஆனாலும் இன்னும் பார்ப்பதற்கு இளம்பெண் போல் தோற்றமளிக்கும் ஸ்ரேயா கோஷலுக்கு திருமணம் ஆனதே நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கிறது ஸ்ரேயா கோஷல் கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட கால காதலரான ஷீலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார் திருமணமாகி ஆறு வருடம் ஆகியும் குழந்தை இல்லாமல் மிகவும் கவலையில் இருந்த ஸ்ரேயா கோஷல்.

தற்போது முதல்முறையாக கருவுற்று இருக்கிறார் அந்த புகைப்படத்தை ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்த புகைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதோடு பல சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.