உங்களை பார்த்து யாரும் பொறாமை படாமல் இருக்க திருஷ்டி நீங்க இந்த மூன்று பொருட்களை இப்படி செய்தாலே போதுமே !!

நாம் நன்றாக இருந்தாலே சிலருக்கு பிடிக்காது. எல்லோருக்கும் இப்படி சில நபர்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக இருப்பார்கள். நம் வளர்ச்சியைக் கண்டும், மகிழ்ச்சியை கண்டும் பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருப்பார்கள். தெரிந்தோ, தெரியாமலோ இப்படிப்பட்ட பிரச்சனைக்குள் சிக்கி உள்ளீர்கள் என்றால், இந்த 3 பொருட்களை வைத்தே இதற்கான தீர்வை காண முடியும். அதை பற்றிய தகவல்கள் இப்பதிவில் காணலாம். இப்போதெல்லாம் ‘நான் நன்றாக இருக்கிறேன்’, என்ற வார்த்தையை கூறுவதற்கு தயக்கமாக தான் இருக்கிறது. எங்கே நாம் நன்றாக இருக்கிறோம் என்று தெரிந்துவிட்டால் திருஷ்டி பட்டுவிடுமோ? நம்மைப் பார்த்து பொறாமைப்பட்டு விடுவார்களோ? என்ற பயம் தான் வருகிறது. இதனாலேயே சிலர், ‘ஏதோ இருக்கிறேன்’ என்று கூறி மழுப்பி விடுகின்றனர்.

நாம் நன்றாக இருக்கிறோம், மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம் என்பதை பிறரிடம் பகிர்ந்து கொள்வதற்கு கூட இந்த அளவிற்கு யோசிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. யாரும், யாரிடமும் முழு உண்மையை கூறுவதில்லை. எல்லா கருத்துகளுக்குள்ளும் உண்மையும், பொய்யும் கலந்தே திணிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் காரணம் பொறாமை கண்கள் தான். ‘கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி பட்டுவிடக் கூடாது’ என்ற பழமொழி நம் முன்னோர்கள் கூறி வைத்தது நன்றாகவே பொருந்துகிறது. மனிதனாகப் பிறந்து விட்டால் இன்ப, துன்பங்களை பகிர்ந்து கொள்வதை தான் வாழ்க்கையின் தத்துவமாக பார்க்க வேண்டும். அதிலேயே பொய் கலந்துவிட்டது என்றால், என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நம்மை சார்ந்தவர்கள், நமக்கு பிடித்தவர்கள், நம் உறவினர்கள், நம் நண்பர்கள் இப்படி எவராக இருந்தாலும் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும்.

நம்மை விட நன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். எங்கே நம்மை விட பெரிய ஆளாக வளர்ந்து விடுவானோ? என்று பொறாமை படக்கூடாது. இது உங்களையும், அவர்களையும் சேர்த்தே பாதிக்கும். இது மிகப்பெரிய பாவச் செயலாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நமது வீட்டில் நல்ல ஆற்றல்களும், தீய ஆற்றல்களும் ஒரு வைப்ரேஷனாக எப்போதும் சுற்றிக்கொண்டு இருக்கும். இதனை ஆங்கிலத்தில் பாசிட்டிவ் வைப்ரேஷன், நெகட்டிவ் வைப்ரேஷன் என்று கூறுகிறார்கள். நாம் என்ன நினைக்கிறோமோ? நம் ஆழ்மனம் எதைப் பற்றிய சிந்தனையில் எப்போதும் இருக்கிறதோ? அதுபோலவே நமது வாழ்க்கையும் அமைகிறது. நீங்கள் நல்லதையே நினைத்தால் அதுபோலவே உங்கள் வாழ்க்கையும் நல்லதாக அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரி, இப்போ விஷயத்திற்கு வருவோம். இது போன்ற நெகட்டிவ் வைப்ரேஷன்களை நம் வீட்டினுள் ஏற்படாதவாறு நம்மால் தடுத்து நிறுத்த முடியும். அதற்கு சிறிது பன்னீர் எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் நன்னாரியை தூளாக செய்து கொண்டு இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறிது பச்சை கற்பூரத்தை நொறுக்கி, அதையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மூன்று பொருட்களும் நல்ல வாசனையை வீட்டிற்குள் கொண்டு வரும். உங்கள் வீடு எப்போதும் தெய்வீக மணம் கொண்டதாக இருக்கும். நன்னாரி வீட்டிற்கு உள்ளேயும், உடலுக்கு உள்ளேயும் தீயவற்றை வெளியேற்றுவதற்கு பயன்படுகிறது. இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து தினமும் உங்கள் வீட்டில் மூலை முடுக்குகளில் தெளித்து வந்தால் சகல திருஷ்டி தோஷங்களும் நீங்கிவிடும். பொறாமை கண்கள் உங்கள் மீது விழாது பாதுகாக்கும். இந்த கலவையை ஒரு முறை தயார் செய்து கொண்ட பின் காற்றுப்புகாத ஒரு பாட்டிலில் அடைத்து விடுங்கள். மாலை 6 மணிக்கு மேல் இந்த தீர்த்தத்தை வீட்டில் தெளித்து வந்தால் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும், தோஷங்களும் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் பெருக்கெடுக்கும் என்பது உண்மை. நீங்களும் மனநிம்மதியுடன் இருப்பீர்கள். நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.