76 இருசக்கர வாகனங்களை திருடி சாவகாசமாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் ! பைக்குகளை திருடிய பின் வினோத செயல்.. போலீஸை திணறடித்த விசித்திர பைக் திருடன்.

பெங்களூருவில் இருசக்கர வாகனங்களை திருடி, பைக் சாகசத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

24 வயதான சுஹைல் என்பவன் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பெங்களூருவை சுற்றியுள்ள இடங்களில் 76 இருசக்கர வாகனங்களை திருடியதோடு, அதனை வைத்து பல்வேறு சாகசங்கள் செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பின்னர் இருசக்கர வாகனங்களை விற்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

செல்போனில் விலை உயர்ந்த பைக்குகளுடன் புகைப்படம் எடுத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, புகைப்படத்தில் இருந்த வண்டி எண்களை ஆய்வு செய்ததில், அவை அனைத்தும் திருட்டு வண்டி என்பது தெரிய வந்தது.

By admin