சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கூட விரைவாக பணக்காரர்களாக மாற முடியும் !! இந்த பொருட்களை, இப்படி தானம் செய்தால் !!

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு காரணம், நாம் செய்த கர்ம வினைகள். கர்ம வினைகளுக்கு, நிரந்தரமான தீர்வு கிடைப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். நாம் செய்த எல்லா பாவத்திற்குமே, சுலபமாக மன்னிப்பு கிடைத்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. சில பாவங்களுக்கு கட்டாயம் தண்டனையை அனுபவித்து தான் ஆகவேண்டும். வேண்டுமென்றால், அந்த கர்ம வினையினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ளலாம். கர்ம வினையினால் உண்டாக்கப்படும் பாதிப்புகளை குறைக்கக்கூடிய சக்தி தானத்திற்கு உண்டு. கர்ம வினையால், விதியின் பயனால், தரித்திரத்தின் பிடியில் சிக்கி கொண்டிருப்பவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விடிவு காலம் பிறக்க வேண்டும் என்றால், இந்தப் பதிவில் சொல்லப்பட்டிருக்கும் தானத்தை தொடர்ந்து செய்து வர வேண்டும்.

‘தரித்திரத்தின் பிடியில் இருப்பவர்களுக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் இருக்கும்.’ பிறகு எப்படி தானம் செய்வது? என்று சிந்திக்காதீர்கள்.உங்களை விட்டு தரித்திரம் நீங்க வேண்டும் என்றால், செல்வ வளம் பெருக வேண்டுமென்றால், நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால், கடன் தொல்லை தீர வேண்டும் என்றால், இந்த சுலபமான பொருட்களை தானம் செய்வதன் மூலம் கட்டாயம் நல்ல பலனை அடைய முடியும். இந்தப் பொருட்களை தானம் செய்வதற்கு நமக்கு ஆகக்கூடிய செலவும் குறைவுதான். அந்த பொருட்கள் என்னென்ன, அதை எப்படி தானம் செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். பின் வரக்கூடிய தானத்தை ஏதாவது ஒரு கோவிலில் வைத்து அந்த கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தானமாகக் கொடுக்கலாம்.

அப்படி இல்லை என்றால் இந்த பொருட்களை எல்லாம், இயலாமல் வாழும் ஊனமுற்றவர்கள், ஆதரவு இல்லாதவர்கள் இப்படிப்பட்டவர்களுக்கு தானமாக கொடுத்து புண்ணியத்தை தேடிக் கொள்ளலாம். பசும்பால், மாதுளம்பழம், அவல், வெல்லம், எலுமிச்சைப் பழம், நெல், தேங்காய், பசு நெய் இப்படிப்பட்ட, இந்த பொருட்களை எல்லாம் உங்கள் கைகளால் தானம் செய்வது உங்களுக்கு, கர்மவினைகளை கட்டாயம் குறைக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் தனித்தனியாக வாங்கியும் தானமாக கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால், எல்லா பொருட்களையும் வாங்கி, ஏதாவது ஒரு விதத்தில் பலகாரங்கள் செய்தும், அந்த பொருட்களை தானம் கொடுப்பது நமக்கு நன்மையைத் தேடித் தரும். எல்லா பொருட்களையும் சேர்த்து என்றால், பாலை வைத்து பால் பாயாசம் செய்து கொடுப்பது, வெல்லம் சேர்த்த சர்க்கரை பொங்கல், இப்படி சமைத்த பொருட்களையும் தானம் செய்வதில் தவறு கிடையாது.

தேங்காயை வைத்து தேங்காய் சாதம் இப்படியாக, அது அவரவர் சௌகரியம் தான். நம்முடைய பாவ கர்ம வினைகளானது குறைக்கப்பட வேண்டும் என்றால் நம்முடைய கர்ம வினைகள், நம்முடைய அடுத்த தலைமுறைகளை தாக்காமல் இருக்க வேண்டுமென்றால், புண்ணிய காரியங்களை தொடர்ந்து செய்து வருவது தான் ஒரே வழி. உங்களுக்கு இருக்கக்கூடிய சொத்துக்கள், வீண்விரையம் ஆனாலும், அதிகப்படியான மருத்துவ செலவினால் உங்களுடைய சொத்து அழிந்துபோகும் நிலை வந்தாலும், அதற்கு காரணமும் உங்களுடைய கர்ம வினைகள் தான். மருத்துவமனைக்கு கொடுக்கக்கூடிய பணத்தில், பத்தில் ஒரு பங்காவது, தர்ம காரியத்திற்கு செலவு செய்யுங்கள். நிச்சயம் உங்களுடைய உடல்நல கோளாறுகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு, வீண் விரயங்கள் குறைக்கப்பட்டு உங்களுடைய ஆரோக்கியமும் மேம்படுவதை உங்களால் உணர முடியும். வீண் விரயங்கள் குறைக்கப்பட்டு, கையில் இருக்கும் காசு, சுப காரியங்களுக்காக செலவானால் போதுமே! நாம் செல்வந்தர்கள் தான்.