ADMK பொள்ளாச்சி நகர கவுன்சிலருடன் அஜித்குமார் பைக் ரைடு.. இணையத்தை கலக்கும் செம போட்டோஸ்!

இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித்குமார் பைக் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வாடிக்கையான ஒன்று. கடைசியாக அஜித் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்கில் வெளியானது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம். வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. AK 61 படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், விசாகப்பட்டினம் & சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

சமீபத்தில் நடிகர் அஜித் குமார் விமான நிலையத்தில் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகின. இந்நிலையில் நடிகர் அஜித் குமார், பொள்ளாச்சி நகராட்சி 8வது வார்டு உறுப்பினர், ADMK வசந்த் உடன் பைக் ரைடு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. AK 61பட லுக்கில் ரைடிங் கியர் அணிந்து அஜித் தோறறமளிக்கிறார். இந்த புகைப்படங்களை அதிமுக கவுன்சிலர் வசந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஐரோப்பிய சுற்றுப்பயணம் & திருச்சி ரைஃபிள் கிளப் துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு பிறகு அஜித்தின் இந்த பைக் ரைடு புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

By admin