ஆரி’யா இப்படி செய்தார்.. கழிவி ஊத்திய பிரபல தமிழ் நடிகர் அப்படி என்ன செய்தார் தெரியுமா……..?

தமிழ் சினிமா உலகில் வெகு காலாமாக உழைத்து அனைவரும் அறியப்படும் நபராக மாறியவர் தான் நடிகர் ஆரி அவர் முதலில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் ஷங்கர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ரெட்டைசுழி படம்தான் என்பது குறிப்பிடதக்கது.என்னதான் இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் அறிமுகம் ஆனாலும் சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய நெடுஞ்சாலை திரைப்படம் தான் ஆரி யை அறியச்செய்தது.

நடிகர் ஆரி சினிமா தவிர்த்து பல்வேறு நற்செயல்களில் தன்னை ஈடுபடத்தி கொண்டுள்ளார் உதாரனமாக ஜல்லிக்கட்டு போராட்டம்,சென்னை வெள்ளம்,விவசாயிகள் பிரச்சனைக்கும் குரல் கொடுத்தவர்தான் நடிகர் ஆரி. விவசாயம் குறித்து பல விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு சென்ற ஆரி கல்லூரி மாணவர்களை ஒன்றினைத்து ஒரே சமயத்தில் அதிக நாற்றுகளை நடவு செய்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.இதோடு நில்லாமல் மாறுவோம் மாற்றுவோம் என்ற அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் உதவிகளை செய்து வருகிறார்.

ஆரி சமிப காலமாக நடித்த மாலை பொழுதின் மயக்கத்திலே,உன்னோடு கா,நாகேஷ் திரையரங்கம் உள்ளிட்ட சில படங்கள் சரியாக அமையாததால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொன்டுள்ள ஆரி ஆரம்பம் முதலே அனைவருக்கும் அறிவுறை சொல்ல அதை சக போட்டியாளர்கள் விமர்சித்தது மட்டும் அல்லாமல் அனைவருக்கும் எதிரியாக மாறினார் ஆரி.என்னதான் அவர்கள் அப்படி செய்தாலும் நாளடைவில் ஆரிக்கு மக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்தது.அனைத்து வாரங்களும் மற்றவர்களால் நாமினேட் செய்யப்படும் ஆரி மக்களின் ஆதரவால் காப்பாற்றப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே திரைப்பட நடிகரும் முன்னால் பிக்பாஸ் போட்டியாளுரமான டேனியல் அளித்த பேட்டி ஒன்றில் ஜல்லிகட்டு போராட்டத்தின் போது ஆரி தன்னை உட்பட யாரையும் மீடியாவிடம் பேச வேண்டாம் பேசினால் நம்மிடம் இருந்து வார்தைகளை புடுங்குவார்கள் என கூறிவிட்டு அவரே மீடியாக்களிடம் பேசினார் அதனை நான் கேட்டதற்கு யாரவது ஒருவர் வழி நடத்த வேண்டமென கூறினார் அந்த பதில் எனக்கு திருப்தியாக இல்லை என கூறியுள்ளார். இது குறித்த டேனியல் பேட்டி கிழே உள்ளது.