எப்படிப்பட்ட பிரச்சனைகளும் கெட்ட சக்தியும் கண் திருஷ்டியும் உங்களை கண்டாலே தூர ஓடிப் போகிவடும் !! சக்தி வாய்ந்த இந்த பொருள் உங்ககிட்ட இருந்தா !!

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம், மந்திரம் போடுபவர்களை தேடி செல்வது என்பது கடினம். நம் குழந்தைகளையும், நம்மையும் கெட்ட சக்தியிடம் இருந்தும், கண் திருஷ்டியிடம் இருந்தும், காக்க வேண்டியது நம் கையிலும் கொஞ்சம் இருக்கின்றது. நேரம் காலம் இல்லாமல், முச்சந்தி, 4 ரோடு சந்திக்கும் இடம், மைதானம் போன்ற இடங்களுக்குச் செல்லும் குழந்தைகளாக இருந்தாலும் சரி. பெரியவர்களாக இருந்தாலும் சரி. அலுவலகத்திற்குச் சென்று விட்டு, நடுஜாமத்தில் வீடு திரும்புபவர்களாக இருந்தாலும் சரி. அவர்களுக்கு என்று ஒரு பாதுகாப்பு கட்டாயம் தேவைப்படுகிறது. நமக்கு நாமே பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டுமென்றால், என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதில் எந்த ஒரு மந்திர தந்திர வித்தைகளும் அடங்கி இல்லை.

இதை சாதாரணமானவர்கள், சாதாரண முறையில், செய்து அணிந்து கொள்ளலாம். இதில் பயப்படும் அளவிற்கு எந்த ரகசியமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க இறை சக்தி நிரம்பிய ஒரு வழிமுறைதான் இது. இதற்கு புதியதாக வாங்கிய ஒரு தாயத்து, ஒரு தர்ப்பைப் புல்லும், சிறிதளவு விபூதி குங்குமமும் மட்டுமே போதும். பொதுவாகவே இந்த தர்ப்பைப் புல்லுக்கு கிரக காலத்திலும்கூட சக்தி குறையாது என்று சொல்லுவார்கள். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தது இந்த தர்ப்பை. இது நாட்டு மருந்து கடையில் விற்கும். அதை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் தர்ப்பைப்புல் இருந்தாலும், மிகவும் நல்லதுதான். அதில் ஒரே ஒரு தர்ப்பைப் புல்லை, எடுத்து சிறியதாக மடித்து, அதாவது நீங்கள் வாங்கி வைத்திருக்கும் தாயத்திற்குள், இந்த ஒரு தர்ப்பைப் புல் அடங்க வேண்டும். அந்த அளவிற்கு சிறியதாக மடித்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் மடித்து வைத்திருக்கும் அந்த தருப்பைப் புல்லை, புதியதாக வாங்கி வைத்திருக்கும் தாயகத்திற்கு உள்ளே போட்டு விடுங்கள். ஒரு தாம்பாளத் தட்டில், அந்த தாயத்தை வைத்துவிட்டு, பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து, விபூதியை ஒரு சிட்டிகை உங்கள் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த ஒரு சிட்டிகையை அந்த தாயத்தின் மேல் போடுங்கள். போடும்போது ‘ஓம் நமசிவாய’ என்று சொல்லவேண்டும். 11 முறை ஓம் நமசிவாய என்று சொல்லி, பதினோரு முறை ஒரு சிட்டிகை விபூதியை அந்த தாயத்தின் மேல் போட்டு, ஈசனை வேண்டிக்கொண்டு, அர்ச்சனை செய்த, அந்த விபூதியையும் அந்த தாயத்தின் உள்ளேயே போட்டு, மூடி விடவேண்டும். தாய் அதற்குள் தர்ப்பைப் புல்லும், விபூதியும் மட்டும்தான் இருக்கின்றது. அவ்வளவுதான். அதன் பின்பு அந்த தாயத்தின் மேல் சிறிதளவு குங்குமத்தை வைத்து, உங்கள் வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளுக்கு இதை கழுத்திலோ, இடுப்பிலோ கட்டினால் கூட எந்த ஒரு தோஷமும் தாக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கூடம் செல்பவர்கள், அலுவலகம் செல்பவர்கள் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இந்த தாயத்தை ஒரு சங்கிலியிலோ அல்லது கருப்பு கயிரிலோ, சிகப்பு கயிறு கோர்த்து கழுத்தில் கட்டி விடலாம். இல்லை, கையில் கட்டி விட்டு விடுங்கள். சிறிய குழந்தைகளாக இருந்தால் இடுப்பில் கட்டுங்கள். இப்படி செய்யும் பட்சத்தில் உங்களுக்கு நீங்களே ஒரு பாதுகாப்பு வளையத்தை போட்டுக் கொண்டதாக அர்த்தம். இந்த தாயத்தை தாண்டி எந்த ஒரு கெட்ட சக்தியும் கண் திருஷ்டியும் உங்களை நெருங்கவே நெருங்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாயத்தை தொடர்ந்து நீங்கள் உங்கள் உடம்பில் கட்டிக் கொண்டு இருந்தால், உங்களுடைய மன தைரியமும் ஒரு சீராக உயர்ந்து வருவதை உங்களால் உணரமுடியும். எதற்கெடுத்தாலும் பயம் என்று சொல்லுபவர்களுக்கு, இந்த தாயத்து ஒரு தைரியத்தை கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள்! இது ஒரு சுலபமான முறைதான். ஆனால், இதற்கு சக்தி அதிகம் என்பதையும் மறந்து விடாதீர்கள்.