பெண்கள் தங்களுடைய சந்ததியினருக்கு சொல்லித்தர வேண்டிய 3 முக்கியமான விஷயங்கள் !! இதன் மூலம் உங்களின் பரம்பரையே சீரும் சிறப்புமாக, செல்வாக்கோடு வாழும் !!

ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்களின் நடவடிக்கைகளும், அந்த குடும்பத்திற்கு வரக்கூடிய அடுத்தடுத்த சந்ததியை தரக்கூடிய இளைய தலைமுறையினருக்கும் வழிகாட்டியாக அமைவது, அந்த குடும்பத்தில் இருக்கும் பெண்கள்தான். ஒரு குடும்பத்தில் பெண்கள் என்ன நெறிமுறைகளை, என்ன பழக்க வழக்கங்களை, கடைப்பிடித்து வருகிறார்களோ, அந்த பழக்கம் தான், அந்த குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும் இருக்கும். அந்த வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் இருக்கும். பெண்கள் முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? குறிப்பாக தங்களுடைய அடுத்த சந்ததியினருக்கு, தங்களுடைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் காலையில் கண் விழிக்கும் பெண்கள் உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து விட்டு, எழும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

இப்படி செய்தால் உங்களின் மூலமாக உங்களுடைய குடும்பத்திற்கு குலதெய்வத்தின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும். உங்களின் குலம் தழைக்க, உங்களின் குடும்ப உறுப்பினர்கள் நீண்ட ஆயுளோடு இருக்க, இந்த வேண்டுதல் துணைநிற்கும்.இந்த பழக்கத்தை நீங்கள் மட்டும் செய்யாமல், உங்களுடைய குழந்தைக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். உங்கள் வீட்டு வாரிசுகளும், கண் விழித்தவுடன் குலதெய்வத்தின் பெயரை உச்சரிக்கும் படி சொல்லிக் கொடுப்பது வீட்டு பெண்களுடைய கடமை. முருகர், சிவபெருமான், பெருமாள், அம்மன், கருப்பண்ணசாமி, முனீஸ்வரர், அய்யனார் இப்படி உங்களுடைய குல தெய்வம் எதுவாக இருந்தாலும் அந்த பெயரை தாராளமாக உச்சரிக்கலாம். இரண்டாவதாக சுய நலமாக இருக்கும் இன்றைய காலகட்டத்தில், நம்முடைய அடுத்த தலைமுறைக்காவது, அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பழக்கத்தை சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

குறிப்பாக அவர்கள் சாப்பிடும் போது, அந்த சாப்பாட்டிற்கு மரியாதை கொடுக்கும் பழக்கத்தை சொல்லித்தாருங்கள். சாப்பாட்டை எடுத்து வாயில் வைப்பதற்கு முன்பாக, இந்த சாப்பாட்டை கொடுத்த இறைவனுக்கு நன்றியை சொல்லி, சாப்பாடு இல்லாமல் இருக்கும் வாயில்லா ஜீவன்களுக்கு என்று, ஒரு பிடி சாதத்தை தனியாக எடுத்து வைத்துவிட்டு, அதன் பின்பு சாப்பிடும் பழக்கத்தை உங்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்லித் தாருங்கள். நவநாகரிக உலகத்தில் சாப்பாட்டிற்கும், அந்த சாப்பாடு இல்லை என்றால் எவ்வளவு தவிப்பு இருக்கும் என்ற கஷ்டத்தை நம்முடைய பிள்ளைகள், இன்றைய சூழ்நிலையில் அறிவதே கிடையாது. இறுதியாக, அவர்கள் மிச்சம் வைத்த அந்த ஒரு பிடி சாதத்தை வெளியில் வரும் நாய்களுக்கும், வாயில்லா ஜீவன்களுக்கு உணவாக வைக்கச் சொல்லுங்கள்.

அவர்கள் கையாலேயே இந்த பழக்கத்தை செய்து வர வேண்டும். அவர்கள் சாப்பிட்ட தட்டை, அவர்கள் கொஞ்சம் பெரியதாக வளர்ந்தவுடன் அவர்களையே சுத்தம் செய்து வைக்கச் சொல்லி, கற்றுக்கொடுக்க வேண்டியதும் அவசியம். வீட்டில் விசேஷ தினங்கள் வந்தது என்றால், அன்றைய தினம் நாம் மட்டும் சந்தோஷத்தை அனுபவிக்க கூடாது. நான் மட்டும் பண்டிகையைக் கொண்டாடக் கூடாது. பண்டிகையை தினத்தன்று கூட, ஒருவேளை நல்ல சாப்பாடு சாப்பிட முடியாமல், இருப்பவர், யாராவது ஒருவருக்கு உதவி செய்த பின்புதான், நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை அவர்களுக்கு சொல்லித்தாருங்கள். குறிப்பாக பிறந்தநாள் தினத்தன்று கோவிலுக்கு செல்வதை விட, சொந்த பந்தங்களோடு கேக் வெட்டி கொண்டாடுவதை விட, இல்லாதவர்களுக்கு உதவி செய்து அந்த தினத்தை கொண்டாட வேண்டும் என்ற மனிதாபிமானத்தை உங்களுடைய சந்ததியினருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய கடமை, அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் கையில்தான் உள்ளது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.