காகத்தைப் பற்றி சாஸ்திரம் என்ன சொல்கிறது ?? இந்த ஒரு பொருளை தினம்தோறும் காகத்திற்கு உணவாக வைத்தால், பல காலமாக தீராத இருந்து வரும் கஷ்டங்கள் கூட தீரும் !!

நம்முடைய பித்ருக்கள் தான் காகத்தின் ரூபத்தில் இந்த பூலோகத்தில் வலம் வருகிறார்கள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு சாஸ்திரம். ஆனால் காகத்தைப் பற்றி நாம் அறியாத இன்னும் பல விஷயங்கள் உள்ளது. இந்த காகத்திற்கு முக்காலத்தையும் அறியக்கூடிய சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா? ஒரு குடும்பத்தில் நடக்கக்கூடிய நல்லது கெட்டதை முன்கூட்டியே வலியுறுத்தும் சக்தியும் இந்த காகத்திற்கு உண்டு என்பதும் உண்மையான ஒன்று. அகத்தியர் கையில் வைத்திருக்கும் கமண்டலத்தில் இருந்த நதி நீரை, விநாயகர் எதற்காக காகத்தின் ரூபத்தில் வந்து தள்ளிவிட வேண்டும். நம்முடைய உலகத்தில் பறவைகளுக்காக பஞ்சம். வேறு ஏதாவது ஒரு பறவை ரூபத்தில் வந்து கூட தட்டி விட்டிருக்கலாமே! காகத்திற்கு இருக்கும் அபரிமிதமான சக்தியை விநாயகரும் உணர்ந்துள்ளார் என்பதுதான் இதற்கு அர்த்தம்.மற்ற பறவைகளிடத்தில் இல்லாத ஒரு குணம் இந்த காகத்திற்கு உள்ளது. பொதுவாக மற்ற பறவைகள் தீட்டுகளை எல்லாம் பார்க்காது.

ஆனால் மனிதர்களைப் போலவே காகம் தீட்டை அனுஷ்டிக்கும். ஒரு காகமானது ஏதாவது ஒரு இடத்தில் இறந்து விட்டால், அந்த காகத்தை சுற்றி மற்ற காகங்கள் மொத்தமாக நின்று “கா கா கா” என்று குரலெழுப்பி இறந்த அந்த காகத்திற்கு துக்கத்தை அனுஷ்டிக்கும். அதன்பின்பு அந்த காகங்கள் எல்லாம் ஒரு நீர்நிலைக்கு சென்று தன்னுடைய தலையை நீரில் நனைத்து தீட்டை கழிக்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நாம் கூட சில இடங்களில் இந்த காட்சியை கண்டிருப்போம். மனிதர்களுக்கு இணையாக தீட்டை கடைபிடிக்கும் வழக்கமும் காக்கைக்கு உண்டு என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். இப்படிப்பட்ட மனிதனுக்கு இணையக பல சாஸ்திர சம்பிரதாயங்களை கடைப்பிடிக்கும் இந்த காகம், தீட்டான சாப்பாட்டை சாப்பிடாது என்பதும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறிப்பு தான். இப்படிப்பட்ட பல சிறப்புகளைக் கொண்ட இந்த காகத்திற்கு தினம்தோறும் உங்களது கைகளால் ‘உலர் திராட்சையை’ உணவாக வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து வைத்து வந்தால், அந்தப் புண்ணியம் உங்களுக்கு ஏழேழு ஜென்மத்திற்கும் தொடரப்படும். அதாவது நீங்கள் பிறந்ததிலிருந்து, உங்களது வாழ்வு முடியும் வரை வாழ்க்கையில் எந்தவிதமான, தீர்க்க முடியாத துன்பங்களும் உங்களுக்கு வராது என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்ததிலிருந்து, சாகுற வரைக்கும் சந்தோஷமா வாழ வேண்டும் என்றால், இந்த சின்ன காரியத்தை நாம் கடை கடைபிடிப்பதில் என்ன கஷ்டம்! சில பேர் வீடுகளில் காகம் வந்து கத்திக்கொண்டே இருக்கும். அது சாப்பாட்டிற்காக கத்தி கொண்டிருந்தால், நீங்கள் உணவு வைத்ததும் அதை சாப்பிட்டுவிட்டு அமைதியாகச் சென்று விடும். சாப்பாடு வைத்தும், தொடர்ந்து காகம் கரைந்து கொண்டே இருந்தால் உங்கள் வீட்டில் சுப செலவுகள் வரப்போகிறது என்பதை குறிக்கிறது. இதேபோல் சிலருக்கு காகம் தன்னுடைய இறக்கை அல்லது கால்களில் வந்து தலையில் தட்டி விட்டுப் போகும் அல்லது அவர்கள் மேல் எச்சில் போடும். இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் உங்களுக்கு உடல் ரீதியாக ஏதோ பிரச்சனை வரப் போகிறது என்பதை குறிக்கும். அதாவது மருத்துவ செலவு வரும். சிலபேருக்கு பெண்களினால் பிரச்சினை தேடிவரக்கூடும். உஷாராக இருந்து கொள்வது நல்லது. பெரியதாக ஆபத்து எதுவும் இல்லை.

வரப்போகும் சின்ன சின்ன பிரச்சனைகளை முன் கூட்டியே வலியுறுத்தும் தன்மை இந்த காகத்திற்கு உண்டு என்று சொல்கிறது சாஸ்திரம். இதேபோல் நீங்கள் காகத்திற்கு சாதம் வைத்த பின்பு, வரும் ஒரு காகம் மட்டும் உணவை அருந்தாமல் அனைத்து காகங்களையும் அழைத்து, எல்லா காகங்களும் சேர்ந்து மொத்தமாக உணவு அருந்தினால், எல்லா பித்ருக்களின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்து விட்டது என்பதை குறிக்கிறது. காகத்திற்கு தினம்தோறும் உணவு அளிப்பதால் பித்ருக்களின் ஆசீர்வாதம், சனிபகவானின் ஆசீர்வாதமும் கிடைக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆனால் இவர்கள் இருவருடைய ஆசீர்வாதத்தோடு சேர்த்து எமதர்மனின் ஆசீர்வாதத்தையும், விநாயகர் ஆசீர்வாதத்தையும் நம்மால் காகத்திற்கு உணவு வைக்கும் போது பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட பலவிதமான அதிசயங்களை உள்ளடக்கிய இந்த காகத்திற்கு பழைய சாப்பாட்டையும், கெட்டுப்போன சாப்பாட்டையும், எச்சில் சாப்பாட்டையும் தயவுசெய்து வைக்க வேண்டாம் என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.