வாழவே பிடிக்காத அளவிற்க்கு கடன் பிரச்சனை உடனே தீர செவ்வாய் ஹோரையில் இவருக்கு இந்த தீபம் ஏற்றுங்கள் !! கர்ம வினையும், கடனும் கழியும் !!

கடன் என்பது இன்று பலருக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சனையாகவும், கவலையாகவும் இருக்கிறது. கடன் பிரச்சினையை தீர்க்க என்ன தான் வழி? என்று தெரியாமல் புலம்பிக் கொண்டு இருப்பவர்களுக்கு இந்த பதிவு உபயோகமாக இருக்கும். ஒருவருக்கு ஜாதகத்தில் தன்னுடைய கர்ம வினைகளை அனுபவித்து ஆக வேண்டும் என்பதற்காக சில கிரகங்கள் ஒன்றாக இணையும் சமயத்தில் நமக்கு கடன் தொல்லைகள், பகைவர் தொந்தரவுகள், தீராத நோய்கள் என்று ஏதாவது ஒரு துன்பங்கள் வந்து கொண்டு இருக்கும். அதற்கான தீர்வை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். செவ்வாயும், சனியும் சேரும் பொழுது அந்த ஜாதகருக்கு தீராத கடன் பிரச்சனை ஏற்படுகிறது. எப்படியாவது கட்டி விடுவோம் என்கிற எண்ணத்தில் தான் நீங்கள் கடன் வாங்கி இருப்பீர்கள்.

அதிலும் ஒரு சிலருக்கு கட்ட முடியாது என்று தெரிந்தும் வேறு வழியே இல்லாத சூழ்நிலையில் கடன் வாங்கியிருப்பார்கள். ஆக இந்த இருவராலும் கடனை கட்ட முடியாது போய்விடும். அது தான் இப்போது பிரச்சனையாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சனை, வருமான தடை, உடல் நிலை பாதிப்புகள் என்று ஏதாவது ஒரு சிக்கல்களில் மாட்டிக் கொண்டு வாங்கிய கடனுக்கு வட்டியை கூட செலுத்த முடியாத சூழ்நிலையில் பரிதவித்து நிற்பார்கள். இது போன்றவர்களுக்கு எம்பெருமான் முருகப் பெருமான் துணையாக இருப்பார். முருகப் பெருமானை நம்பியவர்கள் எப்போதும் கைவிடப்பட்டது இல்லை. முருகனை அன்றி நம் பாரத்தை தாங்க கூடியவர்கள் வேறு யாருமில்லை. கடன் என்ற சுமையை முருகப் பெருமானிடம் இறக்கி வைத்து விடுங்கள். குறிப்பாக திருச்செந்தூர் மற்றும் பழனி முருகனை செவ்வாய் ஹோரையில் வணங்கி விட்டு கடனை செலுத்தினால் கடன் தொல்லை தீரும் என்பது ஐதீகம்.

அதே போல் சரபேஸ்வரர் சன்னதியில் இந்த விளக்கு ஏற்றி பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். சரபேஸ்வரர் என்பவர் மிகுந்த சக்தி வாய்ந்த பறவை, மனிதன் மற்றும் விலங்கு ஆகிய மூன்றின் உருவம் கொண்டவர். இரணியனை அழித்த நரசிம்மரின் கோபம் உக்கிரமானது. அதனை தடுக்க யாராலும் முடியவில்லையாம். அவரின் கோபம் தணிக்க ஈசன் சரபேஸ்வர உருவம் எடுத்ததாகவும் புராணங்கள் கூறுகிறது. பிரத்தியங்கரா தேவியும், சூலினி என்கிற தேவியும் சரபேஸ்வரரின் துணையாக இருப்பவர்கள். இவர்களின் உதவியோடு சரபேஸ்வரர் இட்ட சப்தத்தில் நரசிம்மரின் உக்கிரம் தணிந்ததாக வரலாறு கூறுகிறது. அதனால் சரபேஸ்வரர் பக்தர்களின் துன்பம் தீர்க்க இன்றும் கோவில்களில் அருள் பாலிக்கின்றார். உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் திருத்தலங்களில் சரபேஸ்வரர் சந்நிதியை பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.

செவ்வாய் ஹோரை நேரத்தில் அங்கு சென்று இந்த தீபத்தை ஏற்றுங்கள். நிச்சயம் உங்களுடைய எப்பேற்பட்ட கடனும் விரைவாக தீர்ந்து விடும். செவ்வாய், சனி கிரக சேர்க்கையால் நீங்கள் படும் துன்பங்கள் தீரும். அத்துடன் கர்ம வினை பாவங்களும் நீங்கும். அந்த விளக்கு எப்படி போடுவது என்பதை பார்ப்போம். 9 அகல் விளக்குகளில் தேங்காய் எண்ணெய் விட்டு அதில் வாழை தண்டு நார் மூலம் உருவாக்கப்பட்ட திரிகளை போட்டு ஏழு ஏலக்காய்களை நுணுக்கி விளக்குகளில் சிறிது சிறிதாக போட்டுக் கொள்ளுங்கள். இந்த தீபத்தை சரபேஸ்வரர் சன்னிதியில் ஏற்றி வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்து வாருங்கள். சரபேஸ்வரரின் அருள் இருந்தால் உங்களுக்கு இருக்கும் கடன் தொல்லைகள் சுலபமாக நீங்கி விடும். சரபேஸ்வரரை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கபட்டவர்கள் நலம் பெறுவார்கள்.