உங்கள் வீட்டின் முன் வாசல் கதவில் மகாலட்சுமியின் படம் இப்படி இருந்தால், வரப்போகின்ற பண கஷ்டத்தில் இருந்து உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது !!

நம்முடைய வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு லட்சுமி கடாட்சம் என்பது மிகவும் முக்கியம். ஒருவருடைய வீட்டு பூஜை அறை என்றால், கட்டாயம் அதில் மகாலட்சுமியின் திருவுருவப்படம் இருக்கும். அதேபோல் இப்போதெல்லாம், வீட்டின் முன் வாசல் கதவில், அதாவது நில வாசல் கதவில், மரத்திலேயே மகாலட்சுமியின் திருவுருவப் படத்தை செதுக்கியும், சிலர் வைத்துள்ளார்கள். நம்முடைய வாழ்வை வளமாக்க கூடிய மகாலட்சுமியின் திருவுருவப்படம் எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்கள் வீட்டில் மகாலட்சுமியின் திருவுருவப் படத்தை உள் பக்கமாக பார்த்தவாறு மாட்டி இருந்தாலும் சரி, அல்லது வாசலை பார்த்தவாறு மாட்டி இருந்தாலும் சரி, அது உங்களுடைய இஷ்டம். சில பேர் சொல்லுவார்கள் மகாலட்சுமி வீட்டிற்குள் வரும்படி, வீட்டிற்குள், பார்த்தவாறு திருவுருவப் படத்தை மாட்ட வேண்டும் என்று, சில பேருக்கு மகாலட்சுமியை வாசல் பார்த்தவாறு வைக்கக்கூடாது என்ற கருத்து இருக்கும்.

முடிந்தவரை மகாலட்சுமியின் திருவுருவப்படம் வீட்டிற்குள் பார்த்தவாறு அமைந்திருப்பது நல்லது. ஆனால், நில வாசல்படி கதவில், மகாலட்சுமியின் திருவுருவப்படத்தை பொதிந்து வைத்திருந்தால், கட்டாயம் அது வெளியே பார்த்த மார்கத்தில்தான் அமைந்திருக்கும் அல்லவா? அதனால் எந்த பிரச்சனையும் கிடையாது. குழப்பம் வேண்டாம். ஆனால், உங்களுடைய வீட்டில் நில வாசப்படியில் மரத்தில் செதுக்கி வைத்திருக்கும், அந்த மகாலட்சுமியின் திருவுருவப் படத்தில், மகாலட்சுமியின் வலது கையானது எப்போதுமே பூமியை பார்த்தவாறு இருக்கக்கூடாது. கீழே இருக்கும் மகாலட்சுமியின் திருவுருவப் படத்தை பாருங்கள். இரண்டு பக்கமும் யானைகள் வைத்திருக்கும் இந்த லட்சுமி தேவியை, கெஜலட்சுமி என்றும் சொல்லுவார்கள். மகாலட்சுமியின் வலது கை பூமியை நோக்கி உள்ளது. முடிந்தவரை லட்சுமியின் திருவுருவம் படத்தின் வலது கை பூமியைப் பார்த்து, அதாவது கீழ்நோக்கி இருக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள்.

சிலைகளை செதுக்கும், அனுபவம் வாய்ந்த சிற்பிகளுக்கு இது நன்றாக தெரிந்திருக்கும். சாமுத்திரிகா லட்சணம் என்று சொல்லப்படக்கூடிய லட்சணங்கள், தெய்வங்களுக்கும் இருக்கிறது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வரிசையில், நாம் வாங்கக்கூடிய மகாலட்சுமியின் திருவுருவப்படமாக இருந்தாலும் சரி, திருஉருவச் சிலையாக இருந்தாலும் சரி, ஆடை ஆபரணம் அணிகலன்களோடு சேர்ந்து முக லட்சணமும், கலையாக இருக்கும்படி பார்த்து வாங்க வேண்டியது அவசியமானது. குறிப்பாக வலது கை மேல்நோக்கி இருக்கின்றவாறு, மகாலட்சுமியின் திருவுருவப்படம் அமைந்திருக்க வேண்டும். அது பலவகையான பிரச்சனைகளுக்கு தீர்வை கொடுக்கும். என்ன செய்வது? உங்களுடைய வீட்டில் மரக்கதவில் மகாலட்சுமியின் திருவுருவப் படத்தில் கை கீழ் நோக்கியவாறு செதுக்கப்பட்டு விட்டது.

அதற்கு பரிகாரம் உள்ளதா? உடனடியாக கதவை மாற்ற முடியாது. பரிகாரம் நிச்சயம் உண்டு. அந்த மகாலட்சுமியின் திரு உருவத்திற்கு பக்கத்திலேயே, மகாலட்சுமியின் கை மேலே இருப்பது போன்ற ஸ்டிக்கரை ஒட்டி விடுங்கள். அவ்வளவு தான் வேறு எந்தப் பிரச்சனையும் கிடையாது. இதேபோல் உங்கள் வீட்டு பூஜை அறையில், மகாலக்ஷ்மியின் கை கீழே, பார்த்தவாறு இருந்தால், மகாலட்சுமியின் கை மேலே இருக்கும் படியான, ஒரு படத்தை வாங்கி மாட்டுங்கள். சாஸ்திரத்தில் இதுவும் ஒரு குறிப்பாக சொல்லப்பட்டுள்ளது. தவிர, இதனால் தான் பிரச்சனை என்று ஆணித்தனமாக சொல்லப்படவில்லை. ஒருவேளை, மகாலட்சுமியின் இந்த திருவுருவப்படத்தை சரிசெய்த பின்பு, உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள பதிவுதான் இது.