புது வீட்டிற்கு குடிபோகும் போது, எக்காரணத்தைக் கொண்டும் இந்த ஒரு பொருளை மட்டும் எடுத்து செல்ல கூடாது … அது தரித்திரத்தை தான் தேடித்தரும் !!

நீங்கள் புதியதாக கட்டிய வீட்டிற்கு குடி போதாதாக இருந்தாலும் சரி அல்லது வாடகை வீட்டிற்கு குடி போவதாக இருந்தாலும் சரி, அந்த வீட்டிற்கு முதன்முதலாக எந்தெந்த பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும், எந்த பொருட்களை எடுத்துச் செல்லவே கூடாது, என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு வீட்டில் புதிதாக குடிபோகும் போது, அந்த வீட்டில் குறிப்பாக பால் காய்ச்சுவதற்கு என்ன அர்த்தம் என்ற கேள்விக்கான பதிலையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நம்முடைய வீட்டில் முதல் முதலாக குடிபோகும் போது உப்பு, புளி, பருப்பு தண்ணீர் இந்த பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பது நம்மில் பல பேருக்கு தெரியும். அதுவே, ஒரு வீட்டில் குடி போவதற்கு முன்பாகவே சிலர், தங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை, கொண்டுபோய் புது வீட்டில் வைத்து விடுவார்கள். முடிந்தவரை ஒரு வீட்டில் பால் காய்ச்சி குடி போவதற்கு முன்பு ஜாமான்களை கொண்டுபோய் வைப்பதை தவிர்ப்பது நல்லது.

வேறு வழி இல்லை, சூழ்நிலை காரணமாகவே முந்தைய நாளே பொருட்களை கொண்டு போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுவிட்டது. என்றாலும், முதன்முதலாக அந்த வீட்டிற்குள் நீங்கள் செல்லும்போது பாய், தலையணை, கட்டில், மெத்தை, போன்ற படுக்கை சம்பந்தப்பட்ட பொருட்களை எக்காரணத்தைக் கொண்டும், எடுத்துப் போகக் கூடாது என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. புதிதாக வாங்கிய கட்டில் மெத்தை என்றாலும், அதை முதன் முதலாக நீங்கள் குடி செல்லப்போகும் வீட்டிற்குள் எடுத்துச் செல்லக்கூடாது. இதேபோல் ஒரு வீட்டை நீங்கள் புதியதாக கட்ட ஆரம்பிக்கிறீர்கள் என்றால், அந்த வீடு கட்டுவதற்கு நிறைய பொருட்களை நாம் வாங்க வேண்டியிருக்கும் செங்கல், ஜல்லி, கம்பி, சிமெண்ட், மணல். அந்த வரிசையில் எக்காரணத்தைக் கொண்டும் முதல் முதலாக நீங்கள் வீடு கட்டப்போகும் அந்த இடத்தில் செங்கல்லை கொண்டு வந்து இருக்கக்கூடாது என்றும் சில வாஸ்து குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு வீடு புதுசா குடி போகும்போது அந்த வீட்டில் முதன்முதலாக எதற்காக பால் காய்ச்ச வேண்டும் என்று சொல்கிறார்கள்.

முப்பத்து முக்கோடி தேவர்கள் வாசம் செய்கின்ற பசுமாட்டில் இருந்து கறக்கப்பட்ட பாலை தான், புது வீட்டில் காய்ச்ச வேண்டும் என்பது ஐதீகம். காலப்போக்கில் நாம் இப்போது பாக்கெட் பாலை காய்ச்சிகின்றோம். என்ன செய்வது கால சூழ்நிலை எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. லட்சுமி வாசம் செய்யும் பசுமாட்டில் இருந்து கறந்த பாலைக் கொண்டுவந்து, புது வீட்டில் காய்ச்சும் பட்சத்தில், அந்த வீட்டில் இருக்கக் கூடிய துர்தேவதைகள் கூட, நல்ல தேவதைகளாக மாறிவிடுவார்கள். இதற்காகத் தான் முதல் முதலாக குடிபோகும் வீட்டில், முதன் முதலாக பாலைக் காய்ச்சிப் வேண்டும் என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. சுத்தமான நாட்டு பசும்பாலை புது வீட்டிற்கு குடிபோகும் போது காய்ச்சி, அந்த பால் பொங்கி வழியும் போது, வடக்குப் பக்கமாக பொங்கி வழிந்தால் உங்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சமும் நிலைத்திருந்து பணவரவு அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதே பால் கிழக்குப்பக்கமாக பொங்கி வழிந்தால் நீங்கள் செய்யும் சொந்தத் தொழிலாக இருந்தாலும் அலுவலக பணியாக இருந்தாலும் அதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த பால் மேற்கு பக்கமாக பொங்கி வழிந்தால் உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள் அனைத்தும் விரைவாக தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. தெற்கு பக்கம் பொங்கி வழியும் பட்சத்தில், அதனால் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது பயப்பட வேண்டாம் இன்று ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.