விருது வழங்கும் விழாவில் ஒதுக்கப்பட்ட புகழ்…? க தறி அழுத அஷ்வின் புகழை மேடை ஏற்றி அரவணைத்த நெகிழ்ச்சியான தருணம்….

விஜய் தொலைக்காட்சி என்றாலே அனைவருக்கும் ரியாலிட்டி ஷோக்கள் தான் நினைவுக்கு வரும் மற்ற சேனல்கள் எல்லாம் சீரியல் நோக்கிப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் புதுசு புதுசாக ஏதாவது ஒரு ரியாலிட்டி ஷோக்களை கண்டுபிடித்து அதில் வெற்றியும் காண்பதே விஜய் டிவியின் வழக்கம் அதேபோன்று புதுமையான ஒரு நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி இந்நிகழ்ச்சி ஆரம்பத்தில் ஒரு சமையல் நிகழ்ச்சி என அனைவராலும் பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமே நகைச்சுவைதான் குக்கு வித் கோமாளி என்று இந்த டைட்டில் முதல் கொண்டே நகைச்சுவையை திணித்தது விஜய் டிவி சீசன் 1 ஆரம்பத்தில் சற்று தொய்வாக இருந்தாலும் நாளடைவில் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றது மற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் ஓரங்கட்டிய குக்கு வித் கோமாளி டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தது என்றால் அது மிகையாகாது.

இதற்கு முக்கிய காரணம் அதில் பங்கேற்ற கோமாளிகள் அதிலும் புகழ் பாலா சிவாங்கி ஆகியோர் மிகவும் ரசிக்கப்பட்டனர் விஜய் தொலைக்காட்சியால் தற்போது ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த சீசனில் அஸ்வின் சிவாங்கி புகழ் பாலா இவர்கள் நால்வரும் இதன் மூலம் திரைத்துறையை எட்டும் அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தனர் இந்நிலையில் பிகைண்ட்வுட்ஸ் வருடாவருடம் வழங்கும் கோல்ட் மெடல் விருதுகள் வழங்கப்பட்டது இது சமூக வலைத்தளங்களில் மிகவும் ரசிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்படுவதாகும்.

இந்த விருதை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வினுக்கு வழங்கியது. ரசிகர்கள் அனைவரும் புகழ் தான் இந்த விருதுக்கு சரியான நபர் என்று முணுமுணுக்கும் நேரத்தில் இந்த விருது அஷ்வினுக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கும் மேடையிலேயே அஸ்வின் கதறி அழுது இந்த விருதுக்கு சொந்தக்காரர் புகழ்தான் என்று கூறி அவரை மேடைக்கு வரவழைத்து கட்டியணைத்து கதறி அழுத தருணம் அனைத்து ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.