குலதெய்வத்தின் சாபம் நீங்க, குல தெய்வத்தின் ஆசியை முழுமையாகப் பெற, உங்கள் வீட்டில் இந்த ஒரு விளக்கை ஏற்றி பாருங்கள் !! குலதெய்வம், குலம் காக்க உங்களுடனே இருக்கும் !!

நிறையபேர் வீட்டில் தீராத பிரச்சனைகள் இன்றளவும் இருந்து கொண்டுதான் வருகின்றது. தீராத பிரச்சனை ஒரு குடும்பத்தில் தொடர்ந்து இருந்து வந்தால், அவர்களுக்கு குலதெய்வத்தின் ஆசிர்வாதம் முழுமையாக இல்லை என்றுதான் அர்த்தம். நம் குடும்பம் ஏதேனும் குலதெய்வத்தின் சாபத்திற்கு ஆளாகி உள்ளதா, குலதெய்வம் நம் வீட்டில் வசிக்கின்றதா, எதற்காக தான் இப்படி தொடர் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது என்ற சந்தேகம் உங்களுடைய மனதில் இருந்தால், இந்த வழிபாட்டை உங்களுடைய வீட்டில், உங்களுடைய குலதெய்வத்தை நினைத்து செய்து பாருங்கள் நிச்சயம் கை மேல் பலன் உண்டு. நிறைய பேருக்கு இந்த இடத்தில் ஒரு சந்தேகம் வரும். குலதெய்வத்தின் சாபமா? தெய்வம் தங்களுடைய பக்தர்களுக்கு சாபம் கொடுக்குமா? என்ற சந்தேகம் இருக்கும். தெய்வம் என்பது நம்மை சபிப்பதால் தான், நமக்கு பிரச்சனை ஏற்படும் என்ற அவசியம் கிடையாது. குலதெய்வ வழிபாட்டையும், குல தெய்வத்தை நாம் மறந்து விட்டோமேயானால், அதுவே நமக்கு கிடைக்கபெறும் பெரிய சாபம்தான். ஆகவே, நீங்கள் குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால் கூட, அது உங்களுக்கு சாபமாக தான் மாறும் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டியது மிக மிக அவசியம். சரிங்க, உங்க வீட்டில குலதெய்வ வழிபாட்டை முறைப்படி எப்படி செய்வது? பிரச்சினைகள் எதுவும் இல்லை.

சந்தோஷமாக நீங்கள் வாழ்கிறீர்கள் என்றால், அந்த சந்தோஷம் நிலைத்து இருக்க, உங்கள் வீட்டு குல தெய்வத்தின் திருவுருவப் படத்திற்கு முன்பாக, ஒரு சிறிய மண் அகல் பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து, ஒரு மண் அகல் தீபத்தில் தினம்தோறும் நல்லெண்ணெய் ஊற்றி, அந்த குல தெய்வத்தை மறக்காமல், குலதெய்வத்தின் பெயரை உச்சரித்து வழிபட வேண்டும். அந்தக் குடுவையில் இருக்கும் தண்ணீரை தினம்தோறும் மாற்ற வேண்டும். உங்களுடைய வீட்டில் பிரச்சனைக்கும் குறைவே இல்லை. வீட்டில் மங்கள காரியங்கள் எதுவும் நடப்பதற்கான அறிகுறியும் இல்லை. தீராத கஷ்டம் ஒன்றின் பின்னால், ஒன்று வந்து கொண்டே இருக்கின்றது. முதலில் நீங்கள் ஒரு சிறிய தாம்பூலத் தட்டு, ஒரு சிறிய அளவிலான மண் குடுவை, அந்த மண் குடுவையை மூடும் அளவிற்கு, மண்ணினால் செய்யப்பட்ட ஒரு சிறிய தட்டு, கொஞ்சம் பச்சரிசி, சுத்தமான பசு நெய், தீபம் ஏற்றுவதற்கு திரி, மண் அகல் தீபம், வாசனை மிகுந்த பூக்கள். இறைவனுக்கு நைவேத்தியமாகப் உங்களால் என்ன படைக்க முடியுமோ அது. கல்கண்டு அல்லது பேரிச்சம்பழம் இருந்தால் கூட போதும். முதலில் பூஜை அறையில் தரையை நன்றாக சுத்தம் செய்து விட்டு, தாம்பூலத் தட்டு, மண் குடுவை அகல்தீபம் இவைகளுக்கு, மஞ்சள் குங்கும பொட்டு வைத்து, தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக தரையில் முதலில் தாம்பூலத் தட்டை வைத்து, அதன் மேல் மண் குடுவையை வைத்து, மண் குடுவை முழுவதுமாக பச்சரிசியை நிரப்பிக் கொள்ள வேண்டும்.

அந்த பச்சரிசியில் 5 ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து விடுங்கள். நாணயத்தின் மேல் ஒரே ஒரு பூ, அதன்மேல் மண்ணினால் செய்யப்பட்ட தட்டை வைத்து மூடி விடுங்கள். மண் தட்டுக்கு மேல் பக்கத்தில், மண் அகல் தீபத்தை வைத்து, சுத்தமான பசு நெய்யை ஊற்றி திரியை போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். கீழே வைத்திருக்கும் தாம்பூலத் தட்டில் பூக்களால் அலங்காரம் செய்வது உங்கள் இஷ்டம். தனியாக ஒரு தட்டில் குலதெய்வத்திற்கு நெய்வேதியம் படைக்கப்பட வேண்டும். இது அல்லாமல் ஒரு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை உங்களுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காக, உங்கள் வீட்டில் இருக்கக் கூடிய கஷ்டங்கள் தீர வேண்டும் என்பதற்காக, குல தெய்வத்தை மறந்ததற்கு மன்னிப்பு கேட்டு, அந்த ஒரு ரூபாய் நாணயத்தை மஞ்சள் துணியில் வைத்து முடிந்து, அந்த தாம்புல தட்டிலியை வைத்து விடுங்கள். குலதெய்வத்தை வேண்டி மண் குடுவையில் மேல் இருக்கும் அந்த தீபத்தை ஏற்றி வையுங்கள். அதன் பின்பாக தீப தூப ஆராதனை காட்டி குலதெய்வத்தை நினைவுகூர்ந்து வேண்டிக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் முடிந்தவுடன், முடிந்து வைத்திருக்கும் அந்த காணிக்கையை, குலதெய்வம் உண்டியலில் சேர்த்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. வருடத்திற்கு ஒருமுறை உங்களுடைய வீட்டின் குலதெய்வத்தை நினைத்து இந்த தீபத்தை ஏற்றினால் போதும்.

குலதெய்வம் உங்களது குலத்தைக் காக்க முன்னே வந்து நிற்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. இந்த பூஜைக்காக பயன்படுத்திய எல்லா பொருட்களையும் மீண்டும் நீங்கள் மற்ற பூஜை விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். குடுவையில் இருக்கும் பச்சரிசியை மட்டும் எடுத்து, மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எறும்புகளுக்கு சாப்பாடாக போடலாம். அப்படி இல்லை என்றால் நைசாக அந்த பச்சரிசி அரைத்துவிட்டு உங்கள் வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொள்ளலாம். ஒரு வீட்டிற்கு குலதெய்வம் தெரியாமல் இருக்கவே கூடாது. குலதெய்வத்தின் பெயரை மறக்கக்கூடாது. இருப்பினும் உங்களுக்கு உங்களுடைய குலதெய்வம் தெரியவில்லை என்றால், உங்கள் வீட்டில் நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டு வருகின்றீர்களோ, அதாவது முருகர், பெருமால், இப்படி ஏதாவது ஒரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்று, அந்த தெய்வத்தை உங்கள் தலைமுறையில் இருந்து, உங்களது குல தெய்வமாக நினைத்து வழிபட்டு வர வேண்டியது மிக மிக அவசியம். அதாவது சில பேர் வீட்டில் நாமம் போடுவார்கள். சில பேர் வீட்டில் பட்டை போடுவார்கள் அல்லவா? அல்லது சில பேர் வீட்டில் பெண் தெய்வத்தை வழிபடுவதாக இருந்தால், அம்மனை குலதெய்வமாக வழிபடலாம். பராசக்தி அம்மன், சமயபுரத்து மாரியம்மன், மீனாட்சி அம்மன் இப்படியாக உங்களுக்கு விருப்பமான அம்மன் தெய்வத்தை ஏற்று கூட குலதெய்வ வழிபாட்டை உங்கள் பரம்பரையில் இருந்து தொடங்குவதில் தவறு இல்லை. குலதெய்வமே தெரியாதவர்கள் இந்த முறையை பின்பற்றுங்கள். குலதெய்வம் தெரிந்தவர்கள் குறிப்பிட்ட அந்த தெய்வத்தை மட்டும் தான், குல தெய்வமாக வழிபட வேண்டும். நீங்களே உங்களது குலதெய்வத்தை மாற்றி எல்லாம் வைத்து வைத்துக் கொள்ளக் கூடாது, என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.