இந்த ஒரு பழத்திற்கு இத்தனை மகத்துவமா ?? இத்தனை நாளா நமக்கு இது தெரியாம போச்சே !! இது தெரிந்திருந்தால், என்னைக்கோ குபேரராகியிருக்கலாமே !!

குபேரரின் அருளாசியைப் பெற்று, மகாலட்சுமியின் அருட் கடாட்சத்தை முழுமையாகப் பெறுவதற்கு என்ன வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே மாதுளைபழ மரத்தினை நம்முடைய வீடுகளில் வளர்த்தால், ஐஸ்வர்யத்தை சேர்க்கும் என்று வாஸ்து சாஸ்திரத்திலும், ஜோதிடத்திலும் சொல்லப்பட்டுள்ளது. மாதுளைப்பழ மரத்திற்கு மட்டுமல்ல, அதில் விளையக்கூடிய கனிகுக் கூட லட்சுமி கடாட்சத்தை பெற்றுத் தரும் சக்தி உள்ளது. மாதுளைப்பழத்தில் உள்ளே இருக்கும் முத்துக்கள் போலவே, நம்முடைய வாழ்க்கையும் மிகவும் அழகாக மாறும், இந்த பரிகாரத்தை செய்தால்! இது ஒரு சுலபமான வழிபாடு. மாதுளை பழத்தை வைத்து செய்யக்கூடிய வழிபாடு. உங்களால் முடிந்தால் இந்த வழிபாட்டை 48 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்.

நீங்கள் எண்ணிய காரியம் நிறைவேறும். அப்படி தொடர்ந்து 48 நாட்கள் செய்ய முடியாதவர்கள், வாரம் தோறும் வரும் திங்கட் கிழமையும், வெள்ளிக்கிழமையும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களுடைய வீட்டில் குபேரரது படமோ அல்லது குபேரரின் திருஉருவ சிலை இருந்தால், அந்த சிலையை வைத்து இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்கள் வீட்டு பூஜை அறையில் குபேரரது படத்தை ஒரு தாம்பாளத் தட்டில் வைத்துவிட்டு, அந்தப் படத்திற்கு முன்பு ஒரு மண் அகலில் நெய்தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். வாசனை மிகுந்த தூபத்தையும் ஏற்றி வைத்து விடுங்கள். உங்களுடைய வீட்டில் மாதுளை பழ மரம் இருந்து, அந்த செடியில் இருந்து பழத்தைப் பறித்து பூஜைக்குப் பயன் படுத்துவது மிகவும் விசேஷமானது. மாதுளம் பழம் செடி இல்லாதவர்கள் கடையிலிருந்து வாங்கிய புதியதான மாதுளம் பழ முத்துக்களை, ஒவ்வொன்றாக எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். குபேரனின் படத்திற்கு முன்பாக, ஒரு சிறிய கிண்ணத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கையில் கிண்ணத்தில் வைத்திருக்கும் மாதுளம்பழ முத்துக்களுக்கும் எண்ணிக்கை எல்லாம் கிடையாது.

எவ்வளவு மாதுளம் பழங்களை வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். உங்கள் கிண்ணத்தில் இருக்கும் மாதுளை முத்துக்களை எடுத்து குபேரருக்கு அர்ச்சனை செய்யவேண்டும். ‘ஓம் லட்சுமி குபேராய நம’ இந்த மந்திரத்தைச் சொல்லி அர்ச்சனை செய்யலாம். இப்படியாக இந்த மந்திரத்தை 11, 51, 101, 1001 என்கின்ற எந்த கணக்கில் வேண்டுமென்றாலும் மந்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம்தான். பூஜையை முடித்து விட்டு இறுதியாக அர்ச்சனை செய்த மாதுளம் பழங்களை, உங்கள் வீட்டில் அக்கம்பக்கம் இருக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளும் சாப்பிடலாம். பெரியவர்கள் சாப்பிடுவதில் தவறு இல்லை. இருப்பினும் குழந்தைகளுக்கு கொடுப்பது மேலும் சிறப்பை தேடித் தரும். இதே பூஜையை, குபேரனின் படம் இல்லாதவர்கள், மகாலட்சுமியின் படத்தையோ அல்லது மகாலட்சுமியின் திருவுருவச் சிலையை வைத்து கூட பண்ணலாம்.

மகாலட்சுமிக்கு பூஜை செய்யும்போது ‘ஓம் மகா லட்சுமியே நம’ என்ற மந்திரத்தை சொல்லி செய்யுங்கள். மாதுளம் பழத்தை வைத்து இந்த பூஜையை செய்யும் பட்சத்தில், உங்களுக்கு இருக்கக்கூடிய தீராத பல பிரச்சனைகளுக்கு கூடிய விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எந்த பூஜையும் செய்யமுடியாது எந்த மந்திரமும் சொல்ல முடியாது என்றாலும் பரவாயில்லை, ஒரே ஒரு மாதுளம்பழத்தை கொண்டு வந்து மகாலட்சுமிக்கும் குபேரருக்கும் நைவேத்தியமாகப் படைத்து, கூட உங்களது பூஜையை மனதார செய்து வேண்டுதலை வைக்கலாம். உங்களது பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கான வேண்டுதலை மாதுளை பழத்தோடு வையுங்கள், நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும். நினைத்த காரியத்தை நிறைவேற்றி தரும் மாதுளை பழத்திற்கு அத்தனை மகத்துவங்கள் உள்ளது. நம்பிக்கையோடு ஆத்மார்த்தமான வழிபாட்டிற்கு உடனே பலன் கிடைக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.