இந்த ஒரு பொருளை சிறிது பணத்துடன் குறிப்பிட்ட இந்த நேரத்தில் சேர்த்து வைத்தால் நீங்களும் கோடிஸ்வரன் ஆகலாம் !!

இன்று பலருக்கு இருக்கும் பிரச்சனை, பண பிரச்சனையாக தான் இருக்கும். பணப் பிரச்சினை இல்லாத மனிதனே இல்லை என்று கூறும் அளவிற்கு பணத்தட்டுப்பாடு ஒவ்வொருவரது மனதிலும் உறுத்தலாக இருந்து வருகிறது. பணத்தை ஈர்ப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் இப்பொழுது நாம் பார்க்க இருக்கின்றோம். இதை மிக எளிய முறையில் யார் வேண்டுமானாலும் செய்யலாம். தொடர்ந்து தினமும் செய்து வர வேண்டும். அப்படி செய்து வந்தால் நிச்சயம் உங்களுக்கு மேலும் மேலும் பணம் பெருகும். அது எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள். நீங்கள் மாத சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சரி, தினக்கூலி வாங்குபவராக இருந்தாலும் சரி தினமும் ஒரு குறிப்பிட்ட தொகையை பூஜை அறையில் சேர்த்து வைத்து வர வேண்டும். திருப்பதிக்கு செல்பவர்கள் எப்படி உண்டியலில் பணம் சேர்த்து வைக்கிறார்கள்?

அப்படி நினைத்துக் கொண்டு சேர்த்து வைத்து வர வேண்டும். சாதாரண மனிதர்களைப் பொறுத்த வரை நினைத்த நேரத்தில் ஏழுமலையானை தரிசித்து விட முடியாது. அந்த வேங்கடவன் நினைத்தால்! உடனே நாம் திருப்பதிக்கு சென்று வந்து விடுவோம். இது பலருக்கும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்திருக்கும் ஒரு அதிசய நிகழ்வாக இருக்கிறது. அதனால் அதற்கென்று தனியாக உண்டியலில் பணம் சேர்ப்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கமாகும். உண்டியலில் சேர்க்க ஆரம்பித்தால் போதும்! உடனே மளமளவென அதில் பணம் சேர்ந்து உண்டியல் நிரம்பி விடும். அது தான் சூட்சமம். இதை தெரிந்து கொண்டவர்கள் விரைவாகவே பணக்காரனாக மாறிவிடலாம். தேக்கு மரம் எதையும் தேக்கும் ஆற்றல் கொண்டது. எதையும் என்பது பணத்தை தான் குறிக்கிறது. இது பலரும் அறியாத ரகசியம். பண ஈர்ப்பு விஷயத்தில் தேக்கு மரமும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறு தேக்கு மரத்துண்டு உங்களிடம் இருந்தாலும் அதை பத்திரப்படுத்தி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தின் முதன் முதலாக செய்பவர்கள் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கவும். குளிகை நேரம் என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம். சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

நம்முடைய வீட்டில் இருக்கும் காலண்டரில் நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களை பார்ப்பது போல் குளிகை என்ற ஒரு நேரம் இருக்கும். இந்த நேரம் எதற்காக பயன்படுகிறது? என்பது பலருக்கும் தெரியாது. குளிகை நேரத்தில் நாம் எதை செய்கிறோமோ! அது திரும்பத் திரும்ப நிகழும் என்பது ஐதீகம். இந்த நேரத்தில் அசையும், அசையா சொத்துக்கள், நகைகள் போன்றவற்றை வாங்கி குவிப்பார்கள். அதனால் அதை திரும்பத் திரும்ப வாங்கும் யோகத்தை அமைத்து தருமாம். அது போல் நீங்கள் பணத்தை சேர்க்கும் பொழுது தினமும் குளிகை நேரம் பார்த்து சேர்க்க வேண்டும். உங்கள் வீட்டு பூஜை அறையில் தேக்கு மரத்தால் ஆன உண்டியல் கிடைத்தால் வாங்கி வையுங்கள். அப்படி இல்லை என்றால் வேறு ஏதாவது ஒரு பணம் சேர்க்கும் படியான டப்பாவை வையுங்கள். வெள்ளிக்கிழமை அன்று, குளிகை நேரத்தில் நீங்கள் எடுத்து வைத்த தேக்கு மரத் துண்டை அதில் போட்டு, முதல் தொகையாக ஒரு சிறு தொகையை சேர்த்து வையுங்கள். அன்றிலிருந்து தினமும் உங்களால் முடிந்த தொகையை, அது எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம், சேர்த்து வைத்து வாருங்கள். இது போல் நீங்கள் செய்வதால் விரைவிலேயே அந்த டப்பா நிரம்பும். ஒருமுறை அந்த டப்பாவை நீங்கள் கஷ்டப்பட்டு நிரப்பி விட்டால், மீண்டும் மீண்டும் அதில் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆவல் உங்களை பணத்தை சேர்க்க தூண்டும். பணம் சேர்ந்ததும் அதில் இருந்து 10 ரூபாயை விநாயகர் கோவில் உண்டியலில் காணிக்கை செழுத்துங்கள். அதில் இருக்கும் அந்த தேக்குமர துண்டும் பணத்தை வெளியிலிருந்து உங்களுக்கு அதிகமாக ஈர்த்து தரும். இதை முழு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். அந்த நம்பிக்கை தான் உங்களை பணக்காரனாக ஆக்கும். இது பலரும் தங்கள் அனுபவத்தில் கண்ட உண்மை. நீங்களும் முயற்சி செய்து பயனடையுங்கள்.