செல்வம் இருக்கும் இடத்தில் இந்த இரண்டு பொருள் இருந்தால் போதும் !! அள்ள அள்ள பணம் குறையாமல் வந்து கொண்டே இருக்கும் !!

பணம் இருக்கும் இடத்தில் ஒரு சில பொருட்களை சேர்த்து வைப்பதால் தன ஆகர்ஷண சக்தி உண்டாகும் என்பது ஆன்மிக சூட்சம விதி. இதற்கு உதாரணமாக ஒரு விஷயத்தை எடுத்துச் சொல்லலாம். பணத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரம் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். ஏழுமலையான் குடியிருக்கும் வேங்கட மலையில் தயாரிக்கப்படும் லட்டு முதல், கொடுக்கப்படும் தீர்த்தம் வரை அனைத்திலும் இந்த பச்சை கற்பூரம் சேர்க்கப்படுகிறது. அந்த இடத்தில் அள்ள அள்ள குறையாத பணம் சேர்ந்து கொண்டே இருப்பதற்கு இதுவுமொரு காரணம் என்ற கூற்று நிலவுகிறது. அந்த வகையில் இந்த இரண்டு பொருட்களுக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி உண்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட்டால் போதும்!

வேறு ஒன்றுமே செய்யத் தேவையில்லை. அது என்ன பணத்தை ஈர்ப்பது? என்கிற கேள்வி நிறைய பேருக்கு இருக்கும்.பணத்தை ஈர்ப்பது என்றால் நீங்கள் சுயமாக ஈட்டக் கூடிய பணம் வீண் விரயம் ஆகாமல் உங்களிடம் நிரந்தரமாக தங்கும். மேலும் மேலும் பணம் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்புகளை உருவாக்கும். உங்களுக்கு வரவேண்டிய பணத்தை பாக்கி இல்லாமல் வசூல் செய்து தரும். உங்களுக்கு கிடைக்க இருக்கும் அதிர்ஷ்டங்கள் தடைபடாமல் கிடைக்க செய்யும். ஒரு சிலர் இவ்வாறு கூற நாம் கேட்டிருப்போம், ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை’ என்று. அது போன்ற ஒரு சூழ்நிலை வருவதை தன ஆகர்ஷண சக்தி தடுத்து விடும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை, கிடைக்க வேண்டிய நேரத்தில் நிரந்தரமாக தங்க வைக்கும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

நீங்கள் மாத சம்பளம் வாங்குபவராக இருந்தாலும் சரி, தொழில் செய்து ஈட்டக் கூடிய வருமானமாக இருந்தாலும் சரி, அந்த பணத்தை வீட்டில் தென்மேற்கு திசையில், வடக்கு பார்த்து வைப்பது மிகவும் நல்லது. அந்த இடத்தில் நீங்கள் பணத்தை வைக்கும் பொழுது அதனுடன் சேர்த்து ஒரு சிறிய துண்டு மாதுளை குச்சி ஒன்றை வையுங்கள். அதனுடன் சில வாசம் மிகுந்த உதிரி மல்லிகையை வைக்கவும். வாசம் உள்ள இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். மல்லிப் பூவில் இருக்கும் மணம் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமானது. பணத்துடன் இந்த இரண்டு பொருட்களை நீங்கள் சேர்த்து வைத்தால் அள்ள அள்ள குறையாமல் பணம் உங்களிடம் சேர்ந்து கொண்டே இருக்குமாம். மாதுளை குச்சி மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியது என்பார்கள். மாதுளை மரத்தில் இருந்து ஒரு சிறு குச்சியை உடைத்து எடுத்து வந்து பணத்துடன் சேர்த்து வைத்தால் போதும். மிகுந்த சக்தி அந்த இடத்தில் பெருகும்.

ஒவ்வொருவர் வீட்டிலும் மாதுளை மரம் வளர்ப்பது அந்த அளவிற்கு சிறப்பான பலன்களை தரும். மாதுளை மரத்திலும், நெல்லி மரத்திலும் மகாலட்சுமி வாசம் செய்வதாக புராணங்கள் கூறுகிறது. மாதுளை நம் உடலில் ரத்த விருத்தியை மட்டுமல்ல! நம் வீட்டில் பண விருத்தியையும் உண்டாக்கக் கூடியது என்று சொல்லலாம். நீங்கள் நகைகள் வைக்கும் நகை பெட்டியிலும் இது போல் மாதுளம் குச்சியை மட்டும் வைத்து விட்டால் நகைகள் சேர்ந்து கொண்டே இருக்கும். நகைகள் அடகு கடைக்கு போவது தடுக்கப்படும். அந்த அளவிற்கு மாதுளை குச்சியானது அதிக சக்தியுள்ள தெய்வீக ஆற்றல் படைத்தது. இது ஒன்றும் கஷ்டமான பரிகாரம் அல்ல. நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பண வளத்தை தடையின்றி பெருக்கிக் கொள்ளலாம். முடிந்தவரை மாதுளை மரத்தை வீட்டில் வளர்க்க பார்ப்பது ஆகச்சிறந்த பலன்களை தரும் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.