அஜித்திடம் கெஞ்சும் வினோத் !! இது மட்டும் நடந்தால் வெறித்தனமா இருக்கும் !! இதுக்கு அஜித் ஓகே சொன்னால் செம !!

மூன்றாவது முறையாக அஜித்குமார் – இயக்குனர் வினோத் – தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இணைந்துள்ள திரைப்படம் AK61 (அஜித்தின் 61வது திரைப்படம்) இன்னும் இந்த திரைப்படத்திற்கு பெயர் வைக்கவில்லை. படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முந்தைய இரு படங்களைப் போல் இல்லாமல் இது முழுக்க முழுக்க இயக்குனர் வினோத் திரைப்படமாக உருவாகி வருகிறது. என்று கூறப்பட்டு இருக்கிறது. ஆதலால், இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.

அஜீத் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஜான் கொக்கன், வீரா, அஜய் ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மஞ்சு வாரியரும் விரைவில் சென்னை படப்பிடிப்பின் இறுதி அட்டவணையில் ஒரு பகுதியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜீத் தொடர்ந்து மூன்றாவது படம். நடிகர் அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட தோற்றத்தில், ‘ஏகே 61’ படத்தில் நீண்ட தாடியுடன் நடிப்பார். ‘ஏகே 61’ படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும், போஸ்டரில் படத்தின் வெளியீட்டு தேதி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

By admin