பிள்ளையாரை மட்டுமல்ல இவரையும் மஞ்சள் பிடித்து வைத்து வழிப்பட்டு வந்தால் தோஷங்களும் அனைத்தும் நீங்கி குடும்பத்தில் நல்லது நடக்கும் தெரியுமா ??

பிள்ளையாரை மஞ்சளில் பிடித்து வைப்பது நமது இந்து சாஸ்திர பழக்கவழக்கத்தில் ஒன்று. பிள்ளையாரை மஞ்சளில் மட்டுமல்ல, குங்குமம், சந்தனம், விபூதி, சாணம், மண், வெல்லம், உப்பு, வாழைப்பழம், வெண்ணெய், சர்க்கரை இது போன்று இன்னும் சில பொருட்களிலும் மஞ்சளைப் பிடித்து வைத்து வழிபாடுகள் செய்வர். இப்படி ஒவ்வொரு பொருளிலும் பிள்ளையாரை பிடித்து வைப்பதற்கு ஒவ்வொரு தனித்துவமான காரணங்களும், பலன்களும் உண்டு. உதாரணத்திற்கு சர்க்கரையில் பிள்ளையார் பிடித்தால் சர்க்கரை நோயின் வீரியம் குறையும் என்பது நம்பிக்கை. அதுபோல் பிள்ளையாருக்கு மட்டுமில்லை! இந்த ஒருவருக்கும் நாம் மஞ்சள் பிடித்து வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கும். அப்படி நாம் யாரை மஞ்சள் பிடித்து வணங்க வேண்டும்?

என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். அதற்கு முன் பிள்ளையாரை எந்தெந்த பொருள் கொண்டு பிடித்து வைக்கலாம்? அதனால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். 1. பிள்ளையாரை மஞ்சளில் பிடித்து வைத்தால் நினைத்தது நடக்கும். சகல தோஷங்களும், பிணிகளும் நீங்கும். – 2. சந்தனம் கொண்டு பிள்ளையாரை பிடித்து வைத்தால் பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை பாக்கியம் உண்டாகும். 3. குங்குமம் கொண்டு பிள்ளையார் பிடித்து வைப்பதால் குழந்தைகளின் கல்வி திறன் அதிகரிக்கும், செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் குங்குமம் பிள்ளையார் பிடித்து வணங்கி வரலாம். 4. விபூதியில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் உஷ்ணம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும்.

5. வெல்லம் கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கி வந்தால் சௌபாக்கியம் உண்டாகும், உடலில் உண்டாகும் கட்டிகள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும். 6. உப்பு கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கி வந்தால் கண்ணுக்கு தெரியாத எதிரிகள் தொல்லை நீங்கும். 7. வாழைப்பழம் கொண்டு பிள்ளையார் பிடித்து வணங்கினால் உங்கள் வம்சம் தழைக்கும். சந்ததியினர் நலம் பெறுவர். 8. வெண்ணை கண்டு பிள்ளையார் பிடித்து வணங்கி வந்தால் உங்களது கடன் தொல்லைகள் தீரும். பணக்கஷ்டம் உண்டாகாது. 9. கல் கொண்டு விநாயகர் பிடித்து வணங்கி வந்தால் வெற்றிகள் குவியும் 10. மண் கொண்டு பிள்ளையார் பிடித்து வணங்கினால் நீங்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் பதவி உயர்வுகள் கிட்டும். 11. புற்று மண் கொண்டு பிள்ளையாரை பிடித்து வைக்கலாம்.

புற்று மண் பிள்ளையார் பிடிப்பதன் மூலம் நமக்கு தொழில் விருத்தி, வியாபார வளர்ச்சி உண்டாகும். விவசாயத்திற்கு நல்லது. தீராத நோய்கள் தீரும். 12. பசுஞ்சாணம் கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால் சகல தோஷங்களும் நீங்கி, தடைபட்ட சுபகாரியங்கள் தடையின்றி நிறைவேறும். இப்படியாக ஒவ்வொரு பொருளுக்கும் நம் பிள்ளையார் நமக்கு சகல விதத்திலும் அருள் புரிந்து யோகங்களை வாரி வழங்குவார். சங்கடம் தீர்க்கும் பிள்ளையாரை எப்போதும் துதிப்போம். வளம் பெறுவோம். நம் வீட்டில் நம் முன்னோர்கள் தீர்க்க சுமங்கலியாக இறந்து விட்டிருந்தால் அந்த பெண்களை தெய்வமாக போற்றி மஞ்சள் பிடித்து வைத்து பிடித்து வைத்த மஞ்சலில் அவர்களை நினைத்து வீட்டில் வணங்கி வந்தால் அந்த குடும்பத்திற்கு எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் நீங்கிவிடும். அந்தக் குடும்பம் மென்மேலும் உயர்ந்து சகல சவுபாக்கியங்களையும் அடைந்து, பெரும் பேரும் புகழும் கிட்டும்.