எதைத் தொடங்கினாலும் தோல்வி, நஷ்டம், என கவலையா ?? முன்னேற்றம் இல்லை, கையில் பணம் இல்லை. இதற்கு நிரந்தர தீர்வு காண சாம்பிராணி புகையில் இந்த 1 பொருளை போட்டால் போதும் !!

சில பேரெல்லாம் வாழ்க்கையில், ஒரு வருடத்திலேயே நல்ல முன்னேற்றத்தை அடைந்து இருப்பார்கள். திடீரென்று யாருடைய கண் திருஷ்டியோ பட்டது போல, இவர்களுக்கு தொடர்ந்து தோல்விகள் வந்து கொண்டே இருக்கும். ஏதாவது ஒரு முயற்சி செய்தாலும் கூட, அதை அன்றைக்கே செய்து முடிக்க முடியாது. நாளை, நாளை மறுநாள், அதற்கு மறுநாள் என்று தள்ளிக்கொண்டு, இழுத்துக்கொண்டே போகும். அதாவது ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு 40 நாட்களுக்கு மேல் ஆகும். ஒரு காரியத்தை எடுத்தோம் முடித்தோம் என்று இல்லாமல் உங்களது வாழ்க்கையை இழுபறியாக போய்க்கொண்டிருக்கும். இடையில் உடல் உபாதைகள் வேற தேவையில்லாமல் தொந்தரவு கொடுக்கும். நல்லவேளை கையை விட்டுப் போயிருக்கும்.

அதுவும் அந்த வேலையை நீங்களே கெடுத்துக் கொண்டு இருப்பீர்கள். தொழிலில் நல்ல கஸ்டமரோடு சண்டை வரும். இதற்கு கண் திருஷ்டியும் எதிர்மறை ஆற்றலும் கூட ஒரு காரணமாக இருக்கலாம். இவ்வளவு சீக்கிரத்தில் இவ்வளவு முன்னேற்றத்தை அடைந்தால், நிச்சயம் உங்களின் மேல் பலபேரின் கண் திருஷ்டி விழுந்திருக்கத்தான் செய்யும்.இந்த திருஷ்டியானது உங்களது குடும்பத்தையே பிடித்து கட்டாயம் ஆட்டிப்படைக்கும். தொடர் தோல்வியை சரிசெய்ய, வியாபாரம் சிறப்பாக வளர, அலுவலகத்தில் சுறுசுறுப்பாக வேலை செய்து நல்ல முன்னேற்றம் அடைய, எதிர்மறை ஆற்றல்களும் நீங்க என்ன செய்ய வேண்டும், என்கின்ற சுலபமான ஒரு முறையைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

உங்களுடைய வீட்டில் சாம்பிராணி தூபம் போடும் பழக்கம் இருந்தால், அந்த தூபத்தில் கற்பூரவள்ளி இலைகளை பறித்து வந்து அப்படியே பச்சை யோடு போட்டு விடுங்கள். அந்த நெருப்பில், கற்பூரவல்லி இலையானது எரியும் போது, அதிலிருந்து வரக்கூடிய வாசம் உங்களுக்கு இருக்கக்கூடிய, உங்களது உடம்பில் குடிகொண்டிருக்கும் கண் திருஷ்டியும், எதிர்மறை ஆற்றலையும் முழுமையாக நீக்கிவிடும்.இந்த தூபத்தை உங்கள் வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும். இந்த சுவாசத்தை உங்கள் வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் அனைவரும் சுவாசிக்க வேண்டும். வாரத்தில் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். உங்களால் நெருப்பு மூட்டி தூபம் போட முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. கம்ப்யூட்டர் சாம்பிராணி வத்தி 2 அல்லது 3 எடுத்துக்கொண்டு, மொத்தமாக ஏற்றி விடுங்கள்.

அதில் ஒரு கற்பூரத்தையும் போட்டு விடுங்கள். அதில் 5 அல்லது 6 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு புகையை வீடு முழுவதும் காண்பிப்பதும் நல்லதுதான். 3 வாரம் வெள்ளி கிழமைகளில், இந்த துன்பத்தை உங்களுடைய வீட்டில் போட்டு பாருங்கள்! தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் வெற்றி பெற தொடங்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணத்தட்டுப்பாடு நீங்கி நிதி நிலைமை சீராகும். கடன் தொல்லை குறையும். பிரச்சனைகள் குழப்பங்கள் தீரும். முடிந்தால் ஒரு சிறிய தொட்டியில் கற்பூரவள்ளி செடியை வீட்டின் முன்பக்கத்தில் வளர்ப்பது வீட்டிற்கு நன்மை தரும். இந்த பரிகாரம் உங்களுக்கு திருப்தியாக இருந்தால் மட்டும், தொடர்ந்து இந்த பரிகாரத்தை வாரம் ஒரு முறை செய்யலாம், உங்களுடையமனதிற்கு பரிகாரம் திருப்தி தரவில்லை என்றாலும் பரவாயில்லை. 3 வாரத்தோடு நிறுத்திக் கொள்ளலாம்.