நீங்கள் பேசினால் மறு பேச்சு இல்லை அனைவரும் தலையாட்டிக் கொண்டே இருப்பார்கள் !! உங்கள் முகமும், பேச்சும் வசீகரமாக மாற, இந்த வாசனைப் பொருட்களை, இப்படி பயன்படுத்தி பாருங்கள் !!

நாம சொல்ற பேச்ச நாலு பேரு காது கொடுத்து கேட்டு, அதன்படி நடந்தால், அதில் கிடைக்கக்கூடிய சுகமே வேறதான். நாம் சொல்லுவதை கேட்கவும் சில பேர் இருக்கிறார்கள், என்ற நேர்மறை எண்ணம், நம் தகுதியை உயர்த்தும். சிலரைப் பார்க்கும்போது அவரிடம் போய் பேச வேண்டும் என்று தோன்றும். சிலர் பேசும்போதே அவர் சொல்வதை கேட்கவேண்டும் போல் தோன்றும். ஒரு சிலருக்கு எல்லாம் இன்டர்வியூக்கு சென்றவுடன், அவர்களுடைய பர்சனாலிட்டியை பார்த்தே, வேலையைக் கொடுத்து விடுவார்கள். பர்சனாலிட்டி என்பது அழகு மட்டும் கிடையாது. ஒரு விதமான கலை, வசீகரிக்கும் முகத்தில் தான், தேஜஸ் உள்ளது. சில பேருக்கு வாய் ஜாலம் அதிகமாக இருக்கும். வாயை வைத்து பிழைத்துக் கொள்வார்கள். அதாவது எடுத்துக்காட்டாக மார்க்கெட்டிங் ஃபீல்டில் இருப்பவர்களை சொல்லலாம்.

இப்படியாக முக வசீகரம், பேச்சு வசீகரம் இவை இரண்டுமே மனிதர்களுக்கு முக்கியமானது. நம்முடைய முகம் வசீகரத்தையும் பேச்சாற்றலையும் மேலும் அதிகரித்துக் கொள்ள என்ன செய்வது? இந்த வசீகரத் தன்மையை கொடுக்கக் கூடிய சக்தி இயற்கையான வாசனை பொருட்களுக்கு அதிகமாகவே உள்ளது. அதாவது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மை என்று கூட சொல்லலாம். இதனால் தான் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது, அக்தர், ஜவ்வாது போன்ற பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள். நம்மை நாமே வசீகரமானவர்களாக மாற்றிக் கொள்வதற்கு, செயற்கையாக இருக்கும் வாசனை திரவியங்களை பயன்படுத்தாமல், இயற்கையாக கிடைக்கும் ஜவ்வாது, அக்தர், கோரோசனை, சந்தனம், புனுகு, பன்னீர், இவைகளை பயன்படுத்தலாம். பொதுவாகவே பலபேர் இயற்கைக்கு இருக்கும் மகத்துவத்தை தெரிந்துகொண்டு, தற்போது இந்த பொருட்களை எல்லாம் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், இந்த வாசனைப் பொருட்களை பயன்படுத்துவதிலும் ஒரு சூட்சுமம் அடங்கியுள்ளது.

மேல் குறிப்பிட்டுள்ள இந்த, வாசனை பொருட்களையெல்லாம் நாம் பயன்படுத்தும் பட்சத்தில் கட்டாயம் நம்முடைய வசீகரத் தன்மை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. இந்த வசீகரத் தன்மை, வசிய தன்மை என்பது நல்லதுக்காக மட்டுமே தவிர, எந்த விதமான கெட்டதாக்காகவும் இதை உபயோகப்படுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்போதெல்லாம் நீங்கள் வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறீர்களோ, அதாவது இயற்கையான அக்தர், ஜவ்வாது போன்ற வாசனை பொருட்களை பயன்படுத்துகிறீர்களோ அப்போதெல்லாம் 11 முறை ‘ஓம் ஐக்கிய தேவாய நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி விட்டு அதன் பின்பு இந்த வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தி பாருங்கள். சாதாரணமாக இந்த வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கும், இந்த மந்திரத்தை சொல்லி விட்டு, அதன் பின்பு இந்த வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு நிறைய வித்தியாசம் இருக்கும். வசிய சக்தி என்பது மேலும் அதிகரிக்கும். உங்களுடைய மவுசு எப்படி உயர்கிறது என்று. கட்டாயம் நீங்கள் செல்லும் இடத்தில் எல்லாம், உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். உங்களுடைய பேச்சிற்கு உங்களுடன் இருப்பவர்கள், தலையாட்டிக் கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு, அறிவு, திறமை, ஆற்றல், இவை யோடு சேர்ந்த வசீகரத் தன்மையும் ஒருவருக்கு மிக மிக முக்கியம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.